வினோதமானவன் Jeffersonville, Indiana, USA 64-0614E 1சிறிது நேரம் நாம் நின்ற வண்ணமாக இருப்போம். விலையேறப் பெற்ற கர்த்தாவே, ஜெபத்தின் மூலம் நாங்கள் மறுபடியும் உம்முடைய தெய்வீக பிரசன்னத்தில் வந்து, எங்களுக்காக நீர் செய்த எல்லாவற்றிற்காகவும், எங்கள் இருதயத்தில் உம்மீதும் உமது வார்த்தையின் மீதும் நாங்கள் கொண்டுள்ள அன்பிற்காகவும் முதலாவதாக உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, என் முழு இருதயத்தோடு நான் நேசிக்கும் இந்த ஜனங்கள் உம்முடைய வார்த்தையை நேசிக்கும் காரணத்தால் தியாகம் செய்து இன்றிரவு இந்த உஷ்ணமான அறையில் உட்கார்ந்துள்ளனர். கர்த்தாவே, வியாதியஸ்தருக்கும் தேவையுள்ளோருக்கும் ஜெபிக்க இன்றிரவு நாங்கள் வந்திருக்கிறோம். ஆராதனையின் முடிவில் பலவீனமுள்ளவர் ஒருவராவது எங்கள் மத்தியில் இருக்க வேண்டாம். கர்த்தாவே, அவர்களுடைய விசுவாசத்துக் கேற்ற பலனை அளிப்பீராக. கர்த்தாவே, உம்முடைய வார்த்தையின் மூலம் எங்களோடு பேசி, நாங்கள் நிந்தையைச் சுமந்து செல்வதற்கென்று எங்களை பலப்படுத்துவீராக, நிந்தையைச் சுமப்பது எப்படிப்பட்ட ஒரு சிலாக்கியம்! இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென் (உட்காரலாம்). 2இந்தக் கட்டிடத்தில் வந்து அமர்ந்துள்ள இப்படிப்பட்ட ஒரு கூட்டம் ஜனங்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்க எனக்கு வார்த்தைகள் போதாது. இதை அறிவிக்க விரும்புகிறேன். அடுத்த கூட்டத்திற்கென நாளைக்கு நாங்கள் கான்சாஸ் பட்டினத்திலுள்ள டோபிகாவுக்கு செல்லவிருக்கிறோம். அந்த கூட்டங்கள் வரும் ஞாயிறன்று முடிவு பெறும். அதன் பிறகு நாங்கள் பிலதெல்பியாவுக்கு செல்வோம். நாங்கள் வெளி நாடுகளுக்கு - கென்யா, உகாண்டா, டாங்கனிகா என்னும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு - செல்ல உத்தேசித்துள்ளோம். அங்குள்ள மெள- மெள பழங்குடியினரால் ஒரு சிறு கிளர்ச்சி உண்டாகியுள்ளது. மிஷனரி என்னும் முறையில் அங்கு நான் செல்ல முடியாது, ஆனால் வேட்டைக் காரன் என்னும் முறையில் அங்கு செல்ல நான் முயற்சி செய்யப் போகிறேன். உள்ளே செல்ல .... அவர்கள் ஒழுங்கு செய்து வருகின்றனர்.... வழக்கமாக நான் மிஷனரி என்னும் முறையில் உள்ளே சென்று வேட்டைக்குச் செல்வதுண்டு. ஆனால் இம்முறை நான் வேட்டைக்காக உள்ளே சென்று மிஷனரியாயிருப்பேன். எனவே அவர்கள். எந்த வழியிலாவது அவர்களிடம் செல்ல வேண்டும். சகோ. மாட்சன் போஸ் என்னை உள்ளே கொண்டு வருவதற்கான பணியில் இப்பொழுது ஈடுபட்டிருக்கிறார். அவர் வேட்டைக்கென எனக்கு வேட்டைப் பயணம் ஒன்றை ஆயத்தம் செய்து வருகிறார். நான் இந்த பயணத்திற்காக அங்கு செல்வேன். அவர் தூதரகத்துக்கு சென்று, “நம்முடைய சகோ. பிரன்ஹாம் இப்பொழுது இந்த தேசத்தில் இருக்கிறார். இங்கு நாங்கள் ஒரு சிறு கூட்டம் நடத்தினால் பரவாயில்லையா?'' என்று கேட்கப் போகிறார். பாருங்கள்? அது கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்த ஒரு துவக்கமாயிருக்கும். அப்படி எங்களால் செய்ய முடியுமா என்று தெரிய வில்லை; நாங்கள் முயன்று வருகிறோம். அவரால் அனுமதி பெற முடியாமற்போனால், நான் திரும்ப ஜெபர்ஸன் வில்லுக்கு ஜுலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் வந்து ஏழு எக்காளங்களின் மேல் பிரசங்கம் செய்ய அது ஒரு அடையாளமாக இருக்க வேண்டுமென்று கர்த்தரிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 3அப்படி என்னால் செய்யக் கூடுமானால், நாங்கள் 'ஏர்கண்டிஷன்' செய்த இந்த பள்ளி அரங்கத்தை பெற முயற்சி செய்வோம். ஏனெனில் அது நன்றாகவும் குளுமையாகவும் இருக்கும். அது ஆயிரத்தைந்நுறு, ஆயிரத்தெண்ணூறு நபர்களைக் கொள்ளும். அது 'ஏர் கண்டிஷன்' செய்யப்பட்டுள்ளது. புதிய இடம் இங்கிருந்து ஐந்து கட்டிடங்கள் தள்ளியுள்ளது. ஒரு முறை அதை கேட்ட போது அதை கொடுக்க மறுத்து விட்டனர். நமக்கு அதை கொடுக்க மறுத்துவிட்டனர். நமக்கு அதை கொடுக்க மறுத்த அந்த மனிதன் நிர்வாகக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இப்பொழுதுள்ள மனிதன் அதை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார். எனவே அதைப் பெற்றுக் கொள்ள நாங்கள் மிக்க மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம். இப்பொழுது அதை நாம் பெற்றுக்கொள்ளலாம். ஜூலை மாதத்தில் எப்பொழுதாவது... கர்த்தருடைய சித்தத்துக்காக எத்தனை பேர் ஜெபித்துக் கொண்டிருப்பீர்கள். எங்களுக்கு அனுமதி அளிக்கப்படாவிட்டால்.... 4உங்களுக்குத் தெரியுமா, எனக்கு அரிசோனா பிடிக்கும். அது மிகவும் அற்புதமான ஒரு பிரதேசம். அங்கு தங்க நான் எப்பொழுதும் விரும்பினதுண்டு (சகோ. பென், அதை தயவு செய்து சிறிது தள்ளுங்கள். ஓ, ஆம், ஐயா! அது...) அங்குள்ள யாராகிலும் ஒலியைச் சற்று அதிகமாக்குங்கள். ஏனெனில் நான்.... அங்கிருந்து நான் வரும்போது... என்ன சொல்லுகிறீர்கள்? ஓ, அது ஒலி நாடாக்களுக்குரியது. ஓ, மற்றது இங்குள்ளது. நான் வருந்துகிறேன். சரி, சகோ. பென். எனவே நான்.... அரிசோனாவிலிருந்து நான் இங்கு வரும் போது, சீதோஷ்ண நிலையில் மாறுதல் உள்ளதால். என் தொண்டை சிறிது கரகரப்பாகி விடுகிறது. இங்கு ஈரத்தன்மை (humidity) எண்பத்தேழு முதல் தொண்ணூறு வரைக்கும், சிலநேரங்களில் நூறு சத விகிதத்தையும் எட்டி விடுகிறது. ஆனால் அங்கு ஈரத்தன்மை பூஜ்யம். சில சமயங்களில் சராசரி ஒரு சதவிகிதத்தில் இருபதில் ஒரு பாகமாயுள்ளது. நீங்கள் பிராணவாயு கூடாரத்தில் தங்கியிருப்பது போல், அங்கிருந்து நீங்கள் இங்கு வரும்போது, அது எப்படிப்பட்ட வித்தியாசத்தை உங்களில் உண்டாக்கிவிடுகிறது. எனவே அது உங்கள் குரலை தொல்லைப்படுத்தி விடுகிறது.... (சகோ. பென், அது முன்பிருந்த இடத்துக்கே இழுத்து விடுங்கள். நான் தூர தள்ளினதனால் தவறு செய்துவிட்டேன். நான் நினைத்தேன். ஆனால் இங்கு தான் அவர்கள் ஒலியைப் பெருக்குகின்றனர்.) 5நீங்கள் ஒவ்வொருவரும் எனக்காக ஜெபியுங்கள். உங்களை நான் நிச்சயம் மெச்சுகிறேன். யாரோ ஒருவர் ஒரு கூடை “பீச்'' (Peach) பழங்கள் கொண்டு வந்து கொடுத்ததாக பில்லி என்னிடம் கூறினான். நீங்கள் அளிக்கும் சிறு வெகுமதிகள்... போதுமான அளவுக்கு உங்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்க இயலாது. அதை எப்படி செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்ட வெகுமதிகளை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள நான் மிகவும் தகுதியற்றவன் என்று உணருகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறேன். அவர் ஆசீர்வதிப்பாரென்று நானறிவேன். ஏனெனில் அவர், ''மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்'' என்று கூறியுள்ளார் (மத். 25:40). தேவன் உங்களை ஆசீர்வதிப்பாரென்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அரிசோனா மிகவும் நல்ல பிரதேசம்; ஆனால் ஒன்றை மாத்திரம் அங்கு நான் இழந்தவனாயிருக்கிறேன், அதுதான் நீங்கள் எல்லோரும். அது உண்மை! உங்களை நான் காணமுடியாமல் தவிக்கிறேன். நான் எங்கு சென்ற போதிலும், உங்களைப் போன்றவர்கள் எனக்கு கிடைக்காது எனக்கு உலகம் முழுவதிலும் நண்பர்கள் உள்ளனர். உங்களைப் போன்றவர்கள் எனக்கு கிடைப்பது அரிது. இந்த சிறுகூட்ட ஜனங்களிடம் விசேஷமான ஒன்றுண்டு... என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்பொழுதுமே உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறேன். டூசான் பயணிகளின் பட்டினம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கு சபைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு... உங்களுக்குத் தெரியுமல்லவா? அது ஒருவித கடினமாயுள்ளது. அவை மிகவும் ஆவிக்குரியதாய் இல்லை. ஏனெனில் அவர்களிடையே போட்டி மிகவும் பலமாயுள்ளது. அது ஒருவித கடினமாயுள்ளது. நான் உங்களெல்லாரையும் சபையையும் பெற்று அங்கு வாழ முடிந்தால் நலமாயிருக்கும். பாருங்கள்? இங்கு சபையாக நிலைத்திருந்து நீங்கள் எல்லோரும் இந்த சபைக்கு வந்து கொண்டிருப்பீர்களானால், இயேசு வரும் வரைக்கும் இது நிலைத்திருக்கும் என்று எண்ணுகிறேன். 6சற்று முன்பு உங்களை நான் கேட்டுக்கொண்டது போல், எனக்காக ஜெபியுங்கள். நான் அடிக்கடி அதைக் கூற விரும்ப வில்லை. ஆனால் உங்கள் முன்னிலையில் நான் வரும்போது, எனக்கு பயம் ஏற்படுகிறது. மனக்கிலேசம் ஏற்படுகிறது. நான் உணர்ச்சி வசப்படுகிறேன். எனக்கு மனக்கிளர்ச்சியும் உண்டாகி விடுகிறது. நான் ஏற்கனவே அப்படிப்பட்டவன். எனவே அது என் உள்ளத்தை சுக்கு நூறாக உடைத்துவிடுகிறது. ஆனால் நான் எங்கு சென்ற போதிலும், என்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த குழுவைப் போல் வேறெந்த குழுவும் இல்லை என்று எண்ணிப்பார்க்கும் போது; தேவன் நம்மை இணை பிரியாதவர்களாக்கி, வரப்போகும் ராஜ்யத்திலும் நாம் இணைபிரியாதவர்களாயிருக்கும்படி அருளுவாராக என்பதே என் ஜெபமாயுள்ளது. மற்றொரு அறையில் ஒருவரைக் கிறிஸ்துவிடம் வழி நடத்துவதற்கு சற்றுமுன்பு, நான் கதவண்டையில் உட்கார்ந்து கொண்டு பில்டோவிடம் பேசிக்கொண்டிருந்தேன்... அவருக்கு தொண்ணூற்றொன்று வயது. அவர், ''நான் பலவீனமடைந்து வருகிறேன். என் கண்களுக்கு முன்பு போல் பார்வை இல்லை'' என்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பும், இருதயத்தில் இரத்த ஓட்ட தடையும் ஏற்பட்டு அவர் மரணத்தருவாயிலிருந்த போது, நான் அவரிடம் சென்றேன். அவருக்கு சிகிச்சையளித்து, அவர் குணமாக முடியாது என்று கூறின மருத்துவர் இப்பொழுது மரித்து விட்டார். ஆனால் தொண்ணூற்றொன்று வயதான பில்டோ இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார் (பாருங்கள்?). நான் அவரிடம், “பில், பணி செய்வதைப் பொறுத்தவரையில், உம்மால் இவ்வுலகில் உபயோகமாயிருக்க முடியாது. 'ஆனாலும் தேவன் உமக்கு பலத்தை அளிப்பாராக' என்று நான் அவரிடம் முறையிடுகிறேன். ஏனெனில் உமக்கு இந்த கூட்டங்கள் மிகவும் பிரியம் என்றேன். தொண்ணூற்றொன்று வயதான இவர் உஷ்ணம், உலர்ந்த நிலை, குளிர்ந்த நிலை, நடுநிலை எதையுமே பொருட்படுத்தாமல், மோட்டார் வாகனத்தில் நாடு கடந்து, தேவனுடைய வார்த்தையைக் கேட்க வருகிறார். தேவன் அந்த தீரமான ஆத்துமாவை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நான்... 7இன்னும் ஒரு மன்னிப்பை கேட்க விரும்புகிறேன், இன்று காலை உங்களை மூன்று மணி நேரம் பிடித்து வைத்திருந்ததற்காக. நான் செய்திக்கு முழு நியாயத்தையும் செய்யவில்லை. ஏனெனில் அதை சுருக்கி, அதில் சில பாகங்களை கூறாமலே விட்டு விட்டேன். ஆகையால் தான் ஒலிப்பதிவு செய்ய வேண்டாமென்று வேறெங்காவது அதை நான் மறுபடியும் பிரசங்கிப்பேன். நான் ஆவியின் அபிஷேகத்தை உணர்ந்தேன். ஆனால் உங்களுக்கு உஷ்ணமாயிருந்ததையும், நீங்கள் காற்று வீசிக் கொண்டிருந்ததையும் நான் கண்டபோது, எனக்கு வருத்தம் உண்டானது. நீங்கள் கஷ்டப்பட எனக்குப் பிரியமில்லை. நீங்கள் செளகரியமாயிருக்கவே விரும்புகிறேன். பாருங்கள்? அது என்னை கவலைக்குள்ளாக்கியது. நான் வியாதியஸ்தரைக் காணுவது போல் வியாதியஸ்தர் மேல் எனக்கு பரிதாபம் தோன்றாவிட்டால், அவர்களுக்கு நான் எந்த நன்மையும் செய்ய முடியாது. அவர்களுக்காக நான் பரிதபிக்க வேண்டும். அதே போன்றுதான் உங்கள் பேரிலும் நான் பரிதாபம் கொள்ளவேண்டும். இல்லையென்றால் நான் உங்கள் சகோதரனாயிருக்க முடியாது. பாருங்கள்? உங்கள்மேல் நான் இரக்கம் கொள்ள வேண்டும். அப்படி நான் செய்கிறேன். அது உண்மையென்று தேவன் அறிவார். 8இன்றிரவு நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். இந்த சபை எவ்வளவு ஒழுங்காகவும் எல்லாமே சரியான ஸ்தானத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்றும் எனக்கு வரும் தகவல்களின் நிமித்தம் நான் சகோ. காலின்ஸ், சகோ. ஹிக்கர்ஸன், சகோ. நெவில், சகோ. காப்ஸ், தர்மகர்த்தாக்கள் இன்னும் மற்றெல்லாரையும் பாராட்டி வாழ்த்த விரும்புகிறேன். உங்களுக்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஒழுங்கைக் கடைபிடிப்பதற்காக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் ''சகோ. பிரன்ஹாமே, அது முன்பு போல் இல்லை. இப்பொழுது மிகவும் வித்தியாசமாயுள்ளது. தேவனுடைய பிரசன்னத்தின் ஆசீர்வாதமான உணர்வு அங்குள்ளது'' என்று சொல்லி கடிதத்தின் மேல் கடிதம் டூசானுக்கு வருகிறது. அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன், கர்த்தர் உங்களை என்றென்றைக்கும் ஆசீர்வதிப்பாராக, 9பிறகு... இன்றிரவு நான் வேதாகமத்தில் படிக்கும் ஒரு சிறு பாகத்திலிருந்து சில வார்த்தைகள் பேசி; ஓரிரண்டு வேத பாகங்களை வாசித்து உங்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அதன்பிறகு வியாதியஸ்தருக்கு ஜெபிக்கலாம் என்றிருக்கிறேன். சில நிமிடங்கள் மாத்திரமே.நான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். நான் கூடிய வரையில், வேகமாக முடிக்க முயல்கிறேன். ஜனங்கள் ஒன்று கூடியிருக்கையில், வார்த்தையைப் படிக்காவிடில், ஒரு சில வார்த்தைகளைப் பேசாமலிருந்தால், கூட்டம் முழுமையடையாது. உங்களில் அநேகர் காத்திருக்கிறீர்கள். உங்களில் அநேகர் இன்றிரவு பல மைல்கள் பிரயாணம் செய்ய வேண்டும். அதை நான் எவ்வளவாக பாராட்டுகிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் காணும் போது... நான் அரிசோனாவில் இருந்து கொண்டு, “அவரை நான் மறுபடியும் காணும்போது அவரிடம் நடந்து சென்று, அவருடன் கைகுலுக்கி, அவருடைய கழுத்தை கட்டித் தழுவுவேன்'' என்று நினைப்பதுண்டு. இங்கு நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். நான் வேறு யாரிடம், வேறெங்கு செல்ல முடியும்? யாரிடம் முதலில் தொடங்குவது என்றும், எப்படி முடிப்பதென்றும் எனக்குத் தெரியவில்லை. நான் உங்களை நேசிக்கிறேன். தேவனும் உங்களை நேசிக்கிறார். 10நான் தவறு செய்யவில்லை என்றால், நான் தவறான வேத வாக்கியத்தை இங்கு எழுதி வைக்கவில்லை என்றால், பொருளுக்கென நான் 1 கொரிந்தியர் முதலாம் அதிகாரம் 18-ம் வசனம் தொடங்கியும், 2 கொரிந்தியர் 12-ம் அதிகாரம் 11-ம் வசனத்தையும் வாசிக்க விரும்புகிறேன். அதை நாம் வேகமாக எடுத்து படித்து, ஜெபித்து உடனடியாக ஒரு சிறு பொருளின் பேரில் சில நிமிடங்கள் பேசலாம். 1 கொரிந்தியர் முதலாம் அதிகாரம், 18-ம் வசனம் முதல் @@சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது. அந்தப்படி ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்க சாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா?... (நான் மறுபடியும் அதை படிக்கட்டுமா?)... இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா?... (அப்படியானால் இவ்வுலகத்தின் ஞானம் என்ன? பைத்தியம்)... இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா? எப்படியெனில், தேவ ஞானத்துக்கேற்றபடி உலகமானது சுய ஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில் பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று. (நான் மறுபடியும் அந்த வசனத்தைப் படிக்கலாமா? கூர்ந்து கவனியுங்கள்). எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுய ஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று. யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள். நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறுஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவ பெலனும் தேவ ஞானமுமாயிருக்கிறார். இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது. கொரி 1: 18-25, 2: கொரிந்தியர் 12- ம்அதிகாரம் 11-ம் வசனத்தில் பவுல் இவ்வாறு கூறியுள்ளான்: மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களால் மெச்சிக்கொள்ளப்பட வேண்டியதாயிருந்ததே. 2 கொரி. 12:11 11நாம் ஜெபம் செய்வோம். கர்த்தராகிய இயேசுவே, கடந்த நாட்களில் மகத்தான அப்போஸ்தலன் பேசின வார்த்தைகளுடன் இன்றிரவு நீர் சில வார்த்தைகளை கூட்டி, கேட்கிற நாங்கள் அதன் மூலம் பயனடைந்து அதை எங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு, நாங்கள் தேவனுடைய கிரியைகளாயிருக்கவும். நாங்கள் எந்த விதமாக இருக்க வேண்டுமென்று அவர் எங்களைத் தெரிந்து கொண்டுள்ளாரோ, அந்த விதமாக நாங்கள் உருவாக்கப் படவும் அருள் புரியும். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 12கர்த்தருக்கு சித்தமானால், இன்றிரவு சில நிமிடங்கள் வினோதமானவன் (The Odd ball) என்னும் பொருளின் பேரில் பேசப்போகின்றேன். அது ஒரு நாணயமற்ற, பக்குவமற்ற பொருள். இருப்பினும் நான் கூற எண்ணியுள்ளதற்கு இந்தப் பொருள் ஏறத்தாழ பொருத்தமானதாக இருக்கும். உங்களுக்குத் தெரியுமா, இன்றைக்கு அநேக செயல்களின் மூலம் ஜனங்கள் வினோதமானவர்களாகின்றனர். அவர்களை நாம் “Oddballs” என்று அழைக்கிறோம். அந்த சொல்லை நீங்கள் எப்பொழுதாவது கேட்டிருக்கக்கூடும். அது 'விசித்திரமானவன்', மற்றவனுக்கு வினோதமாகக் காணப்படுபவன் என்று பொருள்படும். நாம் மற்றவருக்கு வினோதமாகக் காணப்படுகிறோம் என்பதில் ஐயமில்லை. 13ஒரு நாள் நான் கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வினோதமாக நடந்து கொள்ளும் ஒரு மனிதனைக் கண்டேன். அவன் சாலையில் பகல் வேளையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அவன் என்ன செய்கிறான் என்று காண சாலையின் மறுபுறம் சென்றேன். எல்லோரும் திரும்பி அவனைப் பார்த்து அவனுடைய வினோதத் தன்மையைக் கண்டு கேலியாக சிரித்தனர். அவனுக்கு முன்னால் ஏதோ ஒன்று எழுதி தொங்கவிட்டிருப்பதை நான் கவனித்தேன். இந்த விசித்திரமானவனில் எதைக் கண்டு ஜனங்கள் கேலியாகச் சிரிக்கின்றனர் என்று நான் காண எண்ணினேன். எனவே அவன்.... அவனை நான் கவனித்தேன். ஜனங்கள் அவனைக் காணும் போது ஏளனமாக சிரித்தனர். ஆனால் அவனுடைய சிரிப்பு வித்தியாசமான ஒன்றாக இருந்தது - திருப்தி கொண்ட ஒரு சிரிப்பு. மற்றவர்களின் சிரிப்பு அவனை கேலி செய்வதாக இருந்தது. ஆனால் இவனோ தன் செயலில் திருப்தி கொண்டிருந்தவனைப் போல் தோன்றினது. 14ஒரு மனிதன் தான் செய்வது சரியென்று திருப்தி கொள்ளும்போது, அது யோசிக்க வேண்டிய விஷயமே, அவன் மற்றவர்க்கு வினோதமாக தென்பட்ட போதிலும், அவன் செய்வது சரியென்று திருப்தி கொண்டிருந்தால், அவன் அதில் நிலைத்திருக்கட்டும். அவன் அருகில் நான் சென்ற போது, அவனுடைய மார்பில் ஒரு அட்டை ''நான் கிறிஸ்துவுக்காக முட்டாள்'' என்று எழுதி தொங்கவிடப்பட்டிருந்தது. இதைக் கண்டபோது, எல்லோரும் சிரித்தனர். இந்த மனிதன் அவனை ஏளனம் செய்த கூட்டத்தின் மத்தியில் கடந்து சென்றுவிட்ட பிறகு, அவனுடைய முதுகில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று காண நான் திரும்பினேன். அங்கு தொங்கியிருந்த அட்டையில் ஒரு பெரிய கேள்விக் குறி காணப்பட்டது. அதன் கீழே, ''நீங்கள் யாருடைய முட்டாள்?'' என்று எழுதியிருந்தது. அதில் ஏதோ ஒரு கருத்து அடங்கியுள்ளது என்று நான் எண்ணினேன். பாருங்கள்? அவன் கிறிஸ்துவுக்காக முட்டாள் அல்லது பைத்தியமாயிருப்பதில் திருப்தி கொண்டிருந்தான். பவுலும் கிறிஸ்துவுக்காக பைத்தியமானதாகக் கூறுகிறான். 15முழு சுவிசேஷ வர்த்தகரைச் சேர்ந்த சகோ. ட்ராய் என்பவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் கசாப்புக்காரர். ஒரு முறை அவர் பன்றி இறைச்சியை வெட்டிக் கொண்டிருந்தபோது, ஒருவிதமான கிருமி அவருடைய கைக்குள் புகுந்து விட்டது.... அது எவ்வகை கிருமி என்று இங்குள்ள ஆண் அல்லது பெண் யாராகிலும் அறிந்திருக்கிறீர்களா என்று உங்களைக் கேட்கிறேன். அது உங்களை அரித்து விடும். எனவே அவருடைய உயிரைக் காக்க எண்ணி அவர்கள் அவருடைய மூன்று விரல்களை முறித்து விட வேண்டியதாயிற்று. இப்பொழுது அவர் ஒரு கையில் இரண்டு விரல்கள் மாத்திரம் கொண்டவராய், இப்பொழுதும் கசாப்பு வேலையை செய்து வருகிறார். ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த ஒருவன் அவருடன் லாஸ் ஏஞ்சலிஸில் கசாப்பு கடையில் வேலை செய்து வந்தான். இவனை அவர் கிறிஸ்துவினிடம் வழி நடத்த முயன்று கொண்டே வந்தார். அவன் 'லூத்தரன்' என்றும் அது அவனுக்குப் போதுமென்றும், அவன் லூத்தரன் சபையைச் சேர்ந்த கிறிஸ்தவனாதலால் அவனுக்குத் திருப்தியுண்டு என்றும் அவன் கூறினான். ஒரு இரவு சகோ. ட்ராய் அவனை சபைக்கு கொண்டு செல்லும் சிலாக்கியத்தைப் பெற்றார். 16அவனுடைய பெயர் ஹென்றி. ஜெர்மன் மொழியில் ஹென்றி என்பது 'ஹைன்ரிச்' ஆகும். எனவே அவனை அவர்கள் 'ஹைனி' என்று கூப்பிடுவது வழக்கம். அந்த சொல்லை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவர், 'ஹைனி' என்னுடன் இன்றிரவு சபைக்கு வருகிறாயா?' என்று கேட்டார். அவன், 'சரி, நான் வருகிறேன்'' என்று கூறினான். அவன் ஒரு பழமை நாகரீகம் கொண்ட ஜெபக் கூட்டத்துக்கு சென்றான். அங்கு அவன் உண்மையில் உணர்த்தப்பட்டு தன் இருதயத்தை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தான். ஓ, அடுத்த நாள் இவன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்கு ஒரு முறை அவன் தன் கைகளை உயர்த்தினவாறு கட்டிடத்தின் வழியாக நடந்து சென்று, ''தேவனுக்கு ஸ்தோத்திரம். கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி'' என்று உரத்த சத்தமாய் கூறினதால், அவன் அங்கிருந்த எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தான். பாருங்கள், அங்கு வரிசையில் இருந்த கசாப்புக்காரர் அனைவருக்கும் அவன் வினோதமானவனாக காணப்பட்டான். அவன் இறைச்சியை வெட்டிக் கொண்டிருக்கும்போது, அழத் தொடங்கிவிடுவான். அவன் கத்தியை கீழே வைத்துவிட்டு, அங்குமிங்கும் நடந்து, கிறிஸ்துவுக்கு தன் அன்பை வெளிப்படுத்தி, “ஓ, இயேசுவே, உம்மை எவ்வளவாக நேசிக்கிறேன்'' என்று சொல்லுவான் - பாருங்கள், இங்குமங்கும் நடந்து. 17அவன் இப்படி செய்து கொண்டிருந்ததை அங்கு வந்த முதலாளி கண்டான். முதலாளி வந்ததை அவன் கவனிக்கவில்லை. அவன் இயேசுவைக் குறித்து சிந்தித்தவாறு, தன் கைகளையுயர்த்தி, இங்குமங்கும் நடந்து, அவனுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட, ''ஓ, தேவனே, உம்மை எவ்வளவாக நேசிக்கிறேன்'' என்றான். முதலாளி, “ஹைனி, உனக்கு என்ன நேர்ந்தது? இந்த வரிசையிலுள்ள அனைவருமே அதைக் குறித்து பேசுகின்றனர். உனக்கு என்ன சம்பவித்தது?'' என்றுகேட்டார். அதற்கு ஹைனி, “ஓ, முதலாளி, தேவனுக்கு மகிமை, நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன்'' என்றான். முதலாளி “என்ன?” என்றார். அவன், “நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன். நான் சகோ. ட்ராயுடன் அந்த சிறு கூட்டத்துக்கு சென்றிருந்தேன். அங்கு நான் இரட்சிக்கப்பட்டேன். இயேசு என் இருதயத்தில் வந்தார். நான் அன்பினால் நிறைந்திருக்கிறேன்'' என்றான். முதலாளி, “நீ அந்த 'நட்டு'களின் (அதாவது பைத்தியக்காரரின் - தமிழாக்கியோன்) கூட்டத்திற்கு சென்றிருப்பாய்” என்றார். அவன், “ஆம்! தேவனுக்கு மகிமை! அந்த 'நட்டு'களுக் காக தேவனுக்கு ஸ்தோத்திரம். சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு மோட்டார் வாகனத்திலுள்ள 'நட்டு'களை நீங்கள் கழற்றி விட்டால், அது வெறும் காயலான் கடை இரும்புத் துண்டுகளாக மாறிவிடுகிறது'' என்றான். அவன் கூறினது சரியென்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எல்லா 'நட்டு'களையும் கழற்றிப் பாருங்கள்... 'நட்டு'கள் தான் அவைகளை ஒன்றாக சேர்க்கின்றன. சபையையும் ஒன்றாக சேர்ப்பது அதுவே என்பது என் கருத்து. சில சமயங்களில் அது நாகரீகத்தையும் ஒன்றாக சேர்க்கின்றது. 18சில நாட்களுக்கு முன்பு நான் பிரஸ்காட்டுக்கு விஜயம் செய்து திரும்பி வந்தேன். நான் அந்த வனாந்தரமான இடத்தை நோக்கி, எப்படி பீனிக்ஸில் அவர்களால் அழகிய மலர்களைக் கொண்ட ஜப்பானிய பூங்கா ஒன்றை அமைக்க முடிந்தது என்று வியந்தேன். நான் பையனாக இருந்தபோது, அந்த இடங்களில் மாடு மேய்ப்பது வழக்கம். பசுக்களுக்கு மேய புல் அங்கே இல்லை. எனவே அவை கள்ளிச் செடிகளை உண்டு வளர்ந்தன. வனாந்தரத்தை அவர்கள் உபயோகமுள்ள இடமாக மாற்றி வருவதை நான் கவனித்தேன். வனாந்தரத்தில் கள்ளிச் செடிகளும் பூக்களும்.... நாங்கள் வாடகைக்கு எடுத்துள்ள அந்த வீட்டில் சகோதரி லார்சன் இன்று காலை இங்கிருந்தார்கள் என்று நினைக்கிறேன். அவர்களை நான் கண்டேன். அவர்களுடைய வீட்டின் வெளிப்புறத்தில் அவர்கள் பூச்செடிகளை வளர்க்கிறார்கள். சிறிது புழுதி... அங்குள்ளதெல்லாம் மண் தான். அவர்கள் அங்கு புழுதியை வீட்டின் இரு பக்கத்திலும் நிறைத்து பெரிய பூந்தோட்டத்தை அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலையிலும் நான் வெளியே சென்று இந்த பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நாம் தண்ணீர் பாய்ச்சாவிட்டால், அவை பட்டு போய்விடும். மேலும் அவைகளை பூச்சிகள் அடைந்து அரித்து போடாமலிருக்க, பூச்சி நாசினியைத் தெளிக்க வேண்டும். 19அங்கிருந்து முப்பது அடி தொலைவில் நீங்கள் சென்றால், சில பூக்கள் அங்கு வனாந்தரமான இடத்தில் வளருகின்றன. நீங்கள் இருபது அடி ஆழம் தோண்டினாலும் மண்ணைத் தவிர வேறொன்றும் இருக்காது. அங்கு தண்ணீரே கிடையாது. அவைகளுக்கு பூச்சி நாசினி தெளிப்பது யார்? பாருங்கள்?ஆனால் பூந்தோட்டத்திலுள்ள செடிகளுக்கு நீங்கள் பூச்சி நாசினி தெளிக்காமலும் தண்ணீர் பாய்ச்சாமலும் இருந்தால் பூச்சிகள் அவைகளை அரித்து விடும். ஆனால் வனாந்தரத்திலுள்ள செடிகளை பூச்சிகள் அணுகவே முடியாது. அவைகளை நாள் தோறும் பேணி பாதுகாத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவை சிருஷ்டி கர்த்தரால் உண்டாக்கப்பட்டவை. மற்றதோ கலப்பு செய்து உண்டாக்கப்பட்டது. நான் நினைக்கிறேன், இன்றைக்கு கிறிஸ்தவ மார்க்கம் ஜனங்களுக்கு 'நட்டு' களாக காணப்படும் காரணம் என்னவெனில், நம்மிடையே உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் இராமல், கலப்பு செய்து மறு உற்பத்தி செய்யப்பட்டு, சபையில் அவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக பேணி பாதுகாக்கப்பட்டு, நாசினி தெளிக்கப்பட வேண்டிய கிறிஸ்தவர்கள் இருப்பதால் தான். 20முதலாம் சபை எப்படி இருந்தது என்று எண்ணிப் பார்க்கிறேன். அதனுடன் மறு உற்பத்தி செய்யப்பட்ட இன்றைய சபையை ஒப்பிட்டுப் பாருங்கள். முதலாம் சபையுடன் இதை எவ்வகையிலும் ஒப்பிடவே முடியாது. முதலாம் சபை பரிசுத்த ஆவியைப் பெற்று தேவன் பேரில் விசுவாசமுள்ள கரடுமுரடான விசுவாசிகளைக் கொண்டதாயிருந்தது. அவர்களை நீங்கள் முதுகில் தட்டி, இதில் சேர்த்துக் கொள்கிறேன்' என்று கூற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்களுக்கு டீகன் பதவி அளிக்கப்பட்ட காரணத்தால், அவர்கள் ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு மாறவில்லை. அது கலப்பு செய்த மறு உற்பத்தி . 21நான் 'கடைசி இராப்போஜனம்' என்னும் மைக்கல் ஆஞ்சலோவின் மூல வர்ணப்படத்தைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் தான் அதை வர்ணம் தீட்டினான் என்று நினைக்கிறேன். அந்த மூல படத்தின் விலை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது விலைமதிக்க முடியாத ஒன்று. லட்சக்கணக்கான டாலர்களும் அதன் விலைக்கு ஈடாகாது. ஆனால் அதன் மலிவான மறு உற்பத்தியை நீங்கள் இரண்டு டாலர்களுக்கு வாங்கலாம். அதனால் தான் இன்றைக்கு ஜனங்கள் கரடுமுரடான; உண்மையான விசுவாசிகளைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவர்கள் அவர்களுக்கு நட்டுகளாக காணப்படுகின்றனர். உங்களுக்குத் தெரியுமா, உலகம் மிகுந்த சீர்கெட்ட நிலையை அடைந்து வருவதால், அதை நேராக்க எப்பொழுதாவது ஒரு முறை ஒரு 'நட்டு' தோன்ற வேண்டியதாயுள்ளது. சிறிது வேறுபட்ட யாராகிலும் ஒருவர் காட்சியில் தோன்றும் போது, அவன் அந்த சந்ததிக்கு 'நட்'டாகி விடுகிறான். யார் தான் நட்டு அல்ல வென்று அன்றொரு நாள் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் யாராவது ஒருவருக்கு 'நட்'டாக இருக்கின்றீர்கள். உலகம் முழுவதுமாக பைத்தியக்கார நிலைமையை அடைந்து வருகிறது என்று நான் நம்புகிறேன். சரிக்கும் தவறுக்கும், உண்மைக்கும் பிழைக்கும் ஜனங்கள் வித்தியாசம் அறிய முடியாத காலம் இதுவென்று உங்களுக்குத் தெரியுமா?. 22வேதாகமத்தை மறுபடியுமாக பள்ளிக்கூடங்களில் படிக்க வேண்டும் என்று ஓட்டு போடும் விஷயத்தில் அவர்கள் மெளனமாயிருப்பதை நீங்கள் காணலாம். அவர்களுடைய அரசியல் எப்பக்கத்தில் சாயப் போகின்றது என்று அவர்கள் அறியாமலிருக்கின்றனர். அதை சற்று யோசித்துப் பாருங்கள்! இந்தியானாவில் அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அரிசோனா நாட்டில், வேதாகமத்தை பள்ளிக் கூடங்களில் படிப்பது சட்ட விரோதமானது. இந்தியானாவிலும் ஐக்கிய நாடுகள் முழுவதிலும் அப்படியே, ஏனெனில் ஏதோ ஒரு நாத்தீக ஸ்திரீ முழு திட்டத்தையும் மாற்றி அமைத்துவிட்டாள். நமது பொது ஜன பள்ளிக்கூடங்களில் வேதாகமத்தை படிப்பதென்பது சட்ட விரோதமானது என்பது ஞாபகமிருக்கட்டும். ஆனால் விசுவாசிகள் செலுத்தும் வரிகள் பள்ளிக் கூடங்களில் அவிசுவாசத்தை கற்பிக்க உதவுகின்றன. அரசியல்... நமக்கு மற்றொரு ஆபிரகாம் லிங்கன் அவசியம்; நமக்கு மற்றொரு பாட்ரிக் ஹென்றி அவசியம். அரசியல் சார்பின்றி சரியானதை சரியானதென்றும், தவறை தவறென்றும் தைரியமாக எடுத்துரைக்கும் அமெரிக்கர் ஒருவர் அவசியம். 23தேவனுடைய வார்த்தையா அல்லது ஸ்தாபன சபையா, எது சரியென்று இன்றைய போதகர்கள் தீர்மானிக்க இயலவில்லையென்று உங்களுக்குத் தெரியுமா? எந்த பாதையில் செல்வதென்று அவர்கள் அறியாமலிருக்கின்றனர். எது சரி என்றும் எது தவறென்றும் அவர்களால் தீர்மானிக்க இயலவில்லை. “வேதாகமம் அவ்வாறு உரைக்கிறதென்று எனக்குத் தெரியும், ஆனால் எங்கள் சபையோ இவ்விதம் கூறுகிறது. ''பாருங்கள்? எது சரியென்றும் எது தவறென்றும் தீர்மானிக்க மக்கள் திறனற்றவர்களாயுள்ளனர். வேதாகமத்துக்கு முரணாயுள்ள எதுவுமே தவறாகும்! தேவனுடைய வார்த்தையே சரி, ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் பொய். அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாக அமைந்துள்ளது. இந்த நேரத்தில் சரியான ஒன்றின் மேல் நீங்கள் உறுதியாக நின்றால், நீங்கள் 'நட்'டாக ஆகி விடுகிறீர்கள். வேதாகமத்தில் காணப்படும் ஒரு சிலரை நாம் நினைவுபடுத்திக் கொள்வோம். 24தீர்க்கதரிசியாகிய நோவா மகத்தான விஞ்ஞான காலத்தில் வாழ்ந்தான். அக்காலத்தில் அவர்கள் கூர்நுனிக் கோபுரங்களையும், ஸ்திரீயின் முகமும் சிங்க உடலும் இறக்கைகளுடன் கூடிய பிரம்மாண்டமான சின்னங்களையும் (Sphinxes) கட்டினர். ஆகாயத்தில் தண்ணீர் இல்லையென்று விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் அவர்களால் நிரூபிக்க முடிந்தது... இதோ இந்த கிழவன் அங்கு வந்து ''வானத்திலிருந்து மழை பெய்யப் போகிறது' என்று கூறுகிறான். நோவா அந்த சந்ததிக்கு 'நட்'டாக இருந்தான். அவன் 'நட்'டாக ஆகிவிட்டான். மோசேயைக் குறித்து சிந்திப்போம். இன்று காலை நாம் பேசினது போன்று மோசே பார்வோனிடம் சென்று, “இந்த அடிமைகளை வெளியே கொண்டு போக கர்த்தர் என்னை அனுப்பினார்'' என்றான். அவன் கையில் ஒரு கோலுடன், முழு உலகத்தையும் வென்ற அந்த மகத்தான சேனைக்கு எதிராக நின்றான். பார்வோன் விஞ்ஞான பாண்டித்யம் அனைத்தும் கொண்டவனாய், மோசேயை 'நட்'டாக பாவித்தான். அவன் அவர்களுக்கு ஒரு 'நட்'டாக காட்சியளித்தான். 25தீர்க்கதரிசியாகிய எலியா நாகரீகம் செழித்தோங்கிய அந்த மகத்தான காலத்தில் வாழ்ந்தான். அந்நாட்களில் ஆகாபும் யேசபேலும் உலகத்தை ஆண்டனர். யேசபேல் உடுத்தின நாகரீக உடைகள் போன்ற உடைகளை அவள் மற்ற பெண்களும் உடுக்கும்படி செய்தாள். அவள் தீட்டிய வர்ணங்கள், அவளை அழகாக்கிக் கொண்ட அழகு சாதனங்கள்.... பைத்தியக்காரக் கிழவனாகிய எலியா காட்சியில் தோன்றி முழு தேசத்தையும் எதிர்த்தபோது, அவன் ஆகாபுக்கு ஒரு 'நட்'டாக காட்சியளித்தான். அது உண்மை! தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் இன்றைய ஹாலிவுட் போல் அந்நாளில் திகழ்ந்த சமாரியாவுக்கு சென்றான். அங்கு பெண்கள் ஆபாசமாக உடை உடுத்தி, பகிரங்கமாக விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர், அவர்கள் எவ்வாறு பகிரங்கமாக மற்ற மனிதர்களுடன் வாழ்ந்து... 26இன்றைக்கும் அவ்வாறே அது உங்கள் முன்னிலையில் பகிரங்க விபச்சாரமாயுள்ளது. உண்பதற்காக அன்றொரு இரவு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கு இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கள் விருப்பப்படி கட்டித் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். என் தங்கையே, அது மறைவான விபச்சாரம் என்று உனக்குத் தெரியுமா? ஒரு இளைஞன் உன்னை முத்தம் செய்யும் போது, அவன் ஏற்கனவே உன்னுடன் விபச்சாரம் செய்தாயிற்று. உனக்கு அவனுடன் கல்யாணமாகும் வரைக்கும் அவன் உன்னை முத்தம் செய்ய நீ அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் சுரப்பிகள் - ஆண் சுரப்பிகள், பெண் சுரப்பிகள் இரண்டுமே - உதடுகளில் உள்ளன. உங்களுக்குப் புரிகிறதா? ஆண் சுரப்பிகளும் பெண் சுரப்பிகள் இரண்டுமே - உதடுகளில் உள்ளன. உங்களுக்குப் புரிகிறதா? ஆண் சுரப்பிகளும் பெண் சுரப்பிகளும் ஒன்று சேரும் போது, அது எங்கிருந்த போதிலும், நீங்கள் மறைவாக விபச்சாரத்தில் ஈடுபடுகின்றீர்கள். உன் முகத்திலிருந்து அந்த திரை தூக்கப்பட்டு நீ அவன் மனைவியாகும் வரைக்கும், அவன் உன்னை முத்தமிட அனுமதிக்கக் கூடாது. அப்படி செய்யாதே! அது விபச்சாரம் செய்தல். அது ஆண் சுரப்பிகளும் பெண் சுரப்பிகளும் ஒன்றாக கலத்தல். ஏன் ஒரு ஆண் மற்றொரு ஆணை, ஒரு பெண் மற்றொரு பெண்ணை உதடுகளில் முத்தமிடுவதில்லை? ஏனெனில் சுரப்பிகள் ஒன்றோடொன்று இனம் கலவாது. சுரப்பிகளின் இனக் கலப்பினால் குழந்தைகள் பிறக்கின்றன. எனவே அது எங்கு பார்த்தாலும் ஏறக்குறைய பகிரங்க விபச்சாரமாய் உள்ளது. திரைப்படங்களையும் மற்றெல்லாவற்றையும் பாருங்கள். இப்படிப்பட்ட செயல்களையே நீங்கள் காணலாம். நடத்தை கெட்ட தன்மை அதிகரித்துக் கொண்டே வருவதில் வியப்பொன்றுமில்லை. அந்த பெண்களை உதடுகளில் முத்தமிடுவது விபச்சாரம் என்றும், அவர்கள் மனந்திரும்பாமற் போனால் தேவன் அவர்களை மன்னிக்கமாட்டார் என்று அறிந்த பிறகும், அவர்கள் எப்படி அதை அலட்சியப்படுத்தி அதையே திரும்பத் திரும்பச் செய்ய முடியும்? 27இந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் அங்கு வந்தபோது... அவன் சிறிய தீர்க்கதரிசிகளில் ஒருவன். ஏனெனில் அவனைக் குறித்து அதிகம் எழுதப்படவில்லை. ஆனால் அவன் தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருந்தான். அவன் நகரத்தை நோக்கி... அங்கு பூங்காக்களில் ஆண்கள் பெண்களின் தோள்கள் மேல் கை போட்டுக் கொண்டும், பெண்கள் ஆண்களின் தோள்கள் மேல் கை போட்டுக் கொண்டும் இருந்தனர். அது நவீன ஹாலிவுட்டாகத் திகழ்ந்தது. அவன் நகரத்தின் வழியே நடந்து சென்று, “மனந் திரும்புங்கள், இல்லையேல் அழிந்து போவீர்கள்” என்றான். அவன் ஒரு 'நட்'டாக இருந்தான். அவர்களுக்கு அவன் பைத்திக்காரனாக காட்சியளித்தான். 28யோவான் ஸ்நானன் காட்சியில் தோன்றினபோது, அந்நாளில் இருந்த மத ஸ்தாபனங்களுக்கு 'நட்'டாக காணப் பட்டான். அவன் தன் தகப்பனின் அடிச்சுவடுகளைத் தொடர்ந்து ஒரு ஆசாரியனாக ஆகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அவன் அப்படி செய்ய மறுத்தான். ஏனெனில் அவனுடைய வேலை மிகவும் முக்கியமானதால், தேவன் அவனை கோட்பாடுகள் ஸ்தாபனங்கள் இவைகளினின்று விலக்கி காத்தார். அவன் மேசியாவின் வருகையை அறிவிக்க வேண்டியவன். அவன் பரிசேயர், சதுசேயர், மற்றவர்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ளாமல், அந்த முழு கூட்டத்தையும் புறக்கணித்து, ''ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத் தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்றான் (லூக். 3:8). அவனுடைய நாட்களில் இருந்த மத உலகிற்கு அவன் ஒரு 'நட்'டாக காணப்பட்டான். அது உண்மை ! 29இயேசு காட்சியில் வந்தபோது, அவருடைய நாட்களில் இருந்த மத சம்பந்தமான மக்களுக்கு அவர் ஒரு 'நட்'டாக காணப்பட்டார். அவர்கள் ''நீ ஒரு சமாரியன் உனக்கு மூளை கோளாறு ஏற்பட்டுள்ளது என்றனர். அவர்கள், 'நீ ஒரு பைத்தியக்காரன்'' என்றார்கள். உங்கள் கர்த்தரும் இரட்சகருமானவர் அவர்களுக்கு பைத்தியக்காரராகத் தென்பட்டார். ஆசாரியனாவதற்கும், என்றாவது ஒரு நாள் பிரதான ஆசாரியனாவதற்கும் கமாலியேலால் பயிற்றுவிக்கப்பட்ட பவுல் தமஸ்குவுக்குப் போகும் வழியில் இயற்கைக்கு மேம்பட்ட ஒரு ஒளியால் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டான். அவன் மேலே நோக்கின போது, அவன் யூதனாதலால், அதுதான் தன் ஜனங்களை வழிநடத்தின அக்கினி ஸ்தம்பம் என்று அறிந்து கொண்டான். அவன், 'ஆண்டவரே, நீர் யார்?' என்றான். அவர், ''நானே இயேசு“ என்றார். அவன் தன் கல்வியைக் கைவிட்டு, பள்ளிக்கூடத்தில் பயின்ற வேதசாஸ்திரம் அனைத்தும் கைவிட்டு, தெருப் பிரசங்கியாக மாறின போது, அவன் ஒரு 'நட்'டாக ஆனான். அவன், ''நான் கிறிஸ்துவுக்காக பைத்தியமானேன்'' என்றான். அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாக ஜனங்கள் எண்ணினர். அவன் பெஸ்துவிடம், ''நான் பைத்தியக்காரன் அல்ல'' என்றான். (அப். 26:25). அவன் தேவனை அறிந்திருந்தான், அவ்வளவுதான். ஆனால் ஒரு மத சம்பந்தமான கூட்டத்தில் தேவனை அறிந்திருப்பது என்பது - இதை நீங்கள் காணத் தவற மாட்டீர்கள் என்று நம்புகிறேன் - இந்த நாளில் மத சம்பந்தமான ஒரு கூட்டத்தின் மத்தியில் இயேசுவை அறிந்திருப்பது உங்களை 'நட்'டாக செய்து விடுகிறது. அது மாறவேயில்லை. இதில் நான் அதிக நேரம் நிலைத்திருக்கலாம், ஆனால் நான் ஜெப வரிசைக்காக வேகமாக முடிக்க விரும்புகிறேன். 30அந்த ஜெர்மன் போதகரான மார்டின் லூத்தர் ஒருநாள் இராப்போஜனத்தை கையிலெடுத்து படிக்கட்டின் மேல் எறிந்து, ''இது இயேசுகிறிஸ்துவின் சரீரம் அல்ல. இது இங்கு செய்யப் பட்ட அப்பம்'' என்றார். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று அவர் பிரகடனம் செய்தார். அவர் கத்தோலிக்க சபைக்கு 'நட்'டாக காணப்பட்டார். வேண்டுமானால் அவர் அப்படி செய்ததற்காக அவர்கள் அவரைக் கொன்றிருக்கலாம். ஆனால் அவர் “நட்” என்று அவர்கள் கருதினால், அவரை சும்மா விட்டு விட்டார்கள். அவர் அந்த 'நட்' என்று அவர்கள் கருதினதால், அவரை சும்மா விட்டு விட்டார்கள். அவர் அந்த சந்ததிக்கு 'நட்'டாக ஆனார். இங்கிலாந்தில் நடத்தை கெட்ட நேரத்தில் ஜான் வெஸ்லி... வெஸ்லியன் எழுப்புதல் காட்சிக்கு வந்தபோது, முழு உலகமே ஊழலில் கிடந்து, எங்கு பார்த்தாலும் ஒழுக்கம் கெட்ட நிலை காணப்பட்டது. ஆங்கிலிகன் சபை வெகு தூரம் அகன்று சென்று, அது கால்வீனிய கருத்துக்களைக் கொண்டதாய், இனி ஒருபோதும் எழுப்புதல் கிடையாது என்னும் நிலையை அடைந்து விட்டது. அப்பொழுது ஜான்வெஸ்லி பரிசுத்த மாக்கப்படுதல் என்பதுடன் காட்சியில் எழும்பி, நடத்தை கெட்ட நிலையை சுத்தம் செய்யத் தொடங்கினார். அவர் 'நட்'டாக ஆனார். 31வெஸ்லி எழுதின புத்தகத்திலிருந்து இதை எடுத்துரைக்கிறேன். அவர் வழியில் வந்து கொண்டிருந்தபோது, இங்கிலாந்து சபையைச் சேர்ந்த ஒருவன்.... அவரை எல்லோரும் பைத்தியக்காரன் என்று கருதினர். எனவே அவன் வழி மறித்தான். திரு. வெஸ்லி சிறு உருவம் படைத்தவர். பெரிய உருவம் படைத்த அவன் அவரைக் கன்னத்தில் அடித்து கீழே தள்ள எத்தனித்து வழி மறித்து நின்றான். திரு. வெஸ்லி அவனிடம், ''ஐயா,என்னை மன்னியுங்கள். வழி விடுகின்றீர்களா? நான்அவசரமாக செல்கிறேன்'' என்றார். அந்த ஆங்கிலிகன், ''நான் முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை' என்றானாம். வெஸ்லி மிகவும் மரியாதையுடன் தன் தொப்பியை கீழே இறக்கி விட்டு, அவனைச் சுற்றி நடந்து சென்று, “நான் எப்பொழுதும் முட்டாள்களுக்கு வழிவிடுபவன்'' என்றாராம். எனவே பாருங்கள், அவன் தான் உண்மையில் 'நட்'. ஒருவர் கிறிஸ்துவுக்காக அப்படி இருந்தார்; மற்றவன் தன் சபைக்காக அப்படி இருந்தான். எனவே நீங்கள் யாருக்காவது 'நட்'டாக இருக்கிறீர்கள். ஆம்! 32ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெந்தெகொஸ்தேயினர் காட்சியில் வந்தபோது, ஜனங்கள் அவர்களைப் பைத்தியக்காரர் என்றனர். அவர்கள் 'நட்'டுகளாக காணப்பட்டனர். ஏனெனில் அவர்கள் காட்சியில் எழும்பின் போது சபைகளில் காணப்பட்ட அசுத்தத்தை கடிந்து கொண்டனர். ஆனால் பெந்தெகொஸ்தேயினர் என்ன செய்து விட்டனர்? அவர்கள் வெளிவந்த அதே வாந்திக்கு, அதே ஸ்தாபன அசுத்தத்திற்கு, திரும்பிச் சென்று விட்டனர். அது எதைக் குறிக்கிறது தெரியுமா? வேறொரு 'நட்' எழும்புவதற்கு நேரம் என்று. ஆம், அப்படிப்பட்ட வேறொருவர் எழும்புவதற்கு இதுவே நேரம். அது உண்மை . கவனியுங்கள், ஒரு 'நட்'... ஒரு 'நட்' இருப்பதற்கு முன்பு, அந்த 'நட்' பொருந்துவதற்கு ஒரு 'போல்ட்' (bolt) இருக்கவேண்டும். அந்த 'நட்', 'போல்ட்'டுடன் மறையினால் (thread) இணைகிறது. அப்படி இணையாவிட்டால், அது உபயோகமில்லை. கவனியுங்கள், நோவாவின் காலத்தில் மறையினால் இணைக்கப் பட்டவர்கள் அனைவரும், சுவிசேஷ செய்தியுடன் மறையினால் இணைக்கப்பட்டிருந்தனர். 'நட்'டான நோவா அவர்களை பேழைக்குள் இழுத்துக் கொண்டான். உங்களுடைய மறை என்னவென்பதைப் பொறுத்தது. நீங்கள் எதனுடன் மறையினால் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் உலகத்துடன் மறையினால் இணைக்கப்பட்டிருந்தால், அந்த உலகம் உங்களை இழுத்துக் கொள்ளும். நீங்கள் வார்த்தையுடன் மறையினால் இணைக்கப்பட்டிருந்தால், வார்த்தை உங்களை இழுத்துக் கொள்ளும். எனவே நீங்கள் எதனுடன் மறையினால் இணைக்கப் பட்டிருக்கிறீர்கள் என்றும், எந்த நாட்டை பின்பற்றுகிறீர்கள் என்பதையும் அது பொறுத்தது. ஆனால் நோவா, தேவனுடைய வார்த்தையுடன் 'நட்'டாக இணைந்திருந்த காரணத்தால், அவன் வாழ்ந்த விஞ்ஞான உலகிற்கும் மத சம்பந்தமான உலகிற்கும் அவன் 'நட்'டாக காணப்பட்டதால், இரட்சிக்கப்படக் கூடியவர்களை, அதற்கென்று முன் குறிக்கப்பட்டவர்களை, அந்த 'நட்'டுக்கு முன்பே உண்டாக்கப்பட்ட 'போல்டு'களை அவனால் பேழைக்குள் இழுத்துக் கொள்ள முடிந்தது. எந்த ஒரு போல்டும் மறையினால் 'நட்'டுடன் இணைக்கப்பட வேண்டும். 33சாத்தானுக்கும் சில 'போல்டு'களும் 'நட்'டுகளும் உள்ளன. அவை இவ்வுலக ராஜ்யங்களின் 'போல்டு'களும் 'நட்'டுகளுமாம். மோசே பார்வோனுக்கு 'நட்'டாக காணப் பட்டது போன்று, பார்வோன் மோசேக்கு 'நட்'டாக காணப் பட்டான். பார்வோன் தன் விஞ்ஞான வித்தைகளின் மூலம் நாட்டையே தன் பக்கம் இழுத்துக் கொண்டான். மோசே தேவனுடைய 'நட்'டாக இருந்த காரணத்தால், சபையை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு இழுத்து சென்றான். நீங்கள் எதனுடன் மறையினால் இணைக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது. நோவா சபையை உலகத்திலிருந்து பேழைக்குள் இழுத்துக் கொண்டது போன்று. மோசேயும் சபையை எகிப்திலிருந்து, தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி வெளியே இழுத்தான். இயேசு சொன்னார். இப்பொழுது, கவனமாயிருங்கள். ஏனெனில் இந்த 'நட்'டுகளும் 'போல்டு'களும் காண்பதற்கு ஒன்று போல் இருக்கும். மத்தேயு 24:24. கூடுமானால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று அவர் கூறியுள்ளார். இப்பொழுது அமெரிக்கர்களுக்கும் உலகம் அனைத்திலுமுள்ள ஸ்தாபனங்களுக்கும் ஒரு 'நட்' தேவையாயுள்ளது. 34மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்படேரியன்கள் போன்றவர் அனைவரும் இங்கும் அங்கும் சிதறப்பட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். எப்படியாயினும் அவர்கள் அனைவரும் ஒரே 'போல்டு'டன் மறையினால் இணைக்கப்பட்டுள்ளனர். எனவே தேவன் அவர்களுக்கு ஒரு 'போல்டை' அளித்து, உலக சபைகளின் ஆலோசனை சங்கம் என்னும் 'நட்டை' அனுப்பியுள்ளார். அது அவைகளை ஒன்றாக இழுத்துக் கொள்ளும். அது உண்மை அது நிச்சயம் அப்படிச் செய்யும். அந்த உலக ஆலோசனை சங்கம் அவர்களை ஒன்றாக இழுத்துக் கொள்ளும். உங்களுக்குத் தெரியுமா, அண்மையில் இங்கும் கூட அது அடைந்து விட்டது.... எதுவும் காரணமில்லாமல் நடை பெறுவதில்லை. பெண்கள் உடைகளை களைந்து, குட்டைகால் சட்டை அணிந்து, அதே சமயத்தில் சபையை சார்ந்திருக்க விரும்புகின்றனர். அவர்கள் நீங்கள் பிக்கினி' என்று அழைக்கும் உடைகளை அணிய விரும்புகின்றனர். அப்படி செய்து அதே சமயத்தில் சபையை சார்ந்திருக்க விரும்புகின்றனர். அவர்கள் கூச்சலிட்டு, நடனமாட விரும்புகின்றனர்; ஆராதனை. அது ஒரு ஆராதனை . 35எனக்கு நேரமிருந்தால், அப்படி நடனமாடி அத்தகைய செயல்களில் ஈடுபடுவது பிசாசின் வழிபாடு என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அஞ்ஞான நாடுகளில் நடப்பதை வைத்து அப்படி என்னால் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க முடியும். அவர்கள் இவ்விதமாக ஆராதனை செய்து, அதே சமயத்தில் தங்கள் சாட்சியைக் காத்துக் கொண்டு சபையில் தங்கியிருக்க விரும்புகின்றனர். எனவே தேவன் அவர்களுக்கு இரண்டு மூன்று 'நட்'டுகளைத் தந்தருளினார் - எல்விஸ் ப்ரஸ்லி, பாட்பூன், எர்னி ஃபோர்டு. இவர்கள் தேவனுடைய பாடல்களைப் பாடி தாங்களை கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோருகின்றனர். அது ஒரு 'நட்'. ஆனால் அது வார்த்தையுடன் மறையினால் இணைக்கப்பட்டிருக்க வில்லை. உண்மை! நான் அரை மணி நேரத்தில் முடித்து விடுவேன் என்று கூறினேன். அது கடந்துவிட்டது. கவனியுங்கள், உலகத்திற்கு ஒரு 'நட்' தேவையாயுள்ளது. அது அவர்களுக்கு கிடைக்கும்படி பிசாசு செய்கிறான். அவர்கள் ஏற்கனவே அதற்கென்று மறையிடப்பட்டுள்ளனர். உலகம் ஒரு 'நட்'டுக்காக மறையிடப்பட்டு வரும்போது, மணவாட்டி என்று அழைக்கப்படும் ஒரு கூட்டம் ஜனங்கள் உள்ளனர். அவர்களும் மறையிடப்படுகின்றனர். நான் இங்கு நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக தேவன் ஒரு 'நட்'டை அனுப்பி, மணவாட்டியை இந்த குழப்பத்திலிருந்து வெளியே இழுத்து அவருடைய பிரசன்னத்தில் சேர்த்துக் கொள்வார். அது வார்த்தையினால் மறையிடப்பட்ட 'நட்'டாக இருக்கும். 36சில நாட்களுக்கு முன்பு குற்றம் கண்டு பிடிப்பவர் ஒருவர் டூசானில் என்னிடம், “உங்களுக்குத் தெரியுமா, சிலர் உங்களை 'நட்'டாக கருதுகிறார்கள், மற்றவர்கள் உங்களை தேவனாக செய்து விட்டார்கள்'' என்றார். அவர், ''நீங்கள் தேவன் என்று ஜனங்கள் கருதுகின்றனர்'' என்றார். நான், 'நல்லது, அது...'' என்றேன். ஜனங்கள் அவ்விதம் செய்வதில்லையென்று எனக்குத் தெரியும். அவர் அதை புரிந்து கொள்ளவில்லையென்று நான் அறிந்து கொண்டேன். எனவே நான், 'அது தேவனுடைய வார்த்தையிலிருந்து வெகு தூரம் இல்லை, அல்லவா?'' என்றேன். பாருங்கள்? நாம் இழந்து போன நிலையில் இல்லை என்றும், நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்றும், நாம் எந்த விதமான பாய் மரத்தை உயர்த்தியிருக்கிறோம் என்றும், எந்த விதமான காற்று அதன் மேல் அடிக்கிறது என்றும், நமது மறை என்னவென்றும், நமது 'நட்' என்னவென்றும், நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்றும் அவருக்குத் தெரியப்படுத்த நான், “அது தேவனுடைய வார்த்தையிலிருந்து ஒன்றும் அதிகமாக முரணாயிருக்கவில்லை, இல்லையா? தேவன் இஸ்ரவேல் புத்திரரிடம் அனுப்பின போது, தேவன் மோசேயை தேவனாகவும் (அது உண்மை !), அவனுடைய சகோதரனாகிய ஆரோனை தீர்க்கதரிசியாகவும் ஆக்கினார்'' என்றேன். (யாத். 4:16). அது உண்மை! தீர்க்கதரிசிகள் யாவரும் தேவர்கள் என்று இயேசு கூறினார் (யோவான் 10:35). அந்த மனிதர்கள் தேவர்கள், அது உண்மை! தேவன் அவ்விதமாகவே இருக்க வேண்டுமென்று தீர்மானித்தார். 37கவனியுங்கள், நாம் பிரசங்கிக்கும் வார்த்தையும், இன்று காலை நான் கூறிய வார்த்தைகளும்: ''தேவன் தோல்களின் பின்னால் - தக்சுத் தோல்களின் பின்னால் - மறைந்து கொண்டிருத்தல், தேவன் மனிதனின் தோலின் பின்னால் மறைந்து கொண்டிருத்தல்'... பாருங்கள்? அதைதான் அவர் செய்தார். தேவன் இவ்வுலகில் தோன்றின் போது, அவர் ஒரு திரைக்குப் பின்னால் - இயேசு என்றழைக்கப்பட்ட மனிதனின் தோலின் பின்னால் - மறைந்து கொண்டிருந்தார். அவர் திரையிடப்பட்டு, மோசே என்றழைக்கப்பட்ட மனிதனின் தோலின் பின்னால் மறைந்து கொண்டிருந்தார். அவர்கள் தேவர்கள் - தேவர்கள் அல்ல, அவர்கள் தேவன். ஒரே தேவன் தமது முகமூடியை மாற்றி, ஒவ்வொரு முறையும் அதையே செய்து, இந்த வார்த்தையைக் கொண்டு வந்தார். பாருங்கள், தேவன் அதை அப்படித்தான் செய்தார். மனிதன் ஏதாவதொன்றை காண வேண்டுமென்று அவர் அறிவார். இவ்வுலகில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் .... 38இன்று காலை நான் கூறினதுபோல், யாரும் மோசேயை பின் தொடர்ந்து அங்கு செல்ல துணிச்சல் கொள்ளவில்லை, தேவன் இரண்டு பேர்களுடன் ஒரே நேரத்தில் ஈடுபட்டதில்லை, அவர் எப்பொழுதும் ஒருவருடன் மாத்திரமே ஈடுபடுகிறார். மோசேயைப் போல பாவனை செய்ய யாரும் துணிச்சல் கொள்ளவில்லை. அவனை பாவனை செய்து அவனுடன் அக்கினி ஸ்தம்பத்திற்குள் செல்லுதல் இயற்கை மரணத்தை விளைவித்திருக்கும். எனவே எல்லா ஜனங்களும் அதற்கென்று உண்டாக்கப்படவில்லை. இயற்கைக்கு மேம்பட்ட அதற்குள் பிரதிநிதி ஒருவரை அவருடைய ராஜ்ய தூதராக (ambassador) இவ்வுலகில் நியமிக்கிறார். இந்த ராஜ்ய தூதர் அந்த மகத்தான, அறிந்திராத இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றுக்குள் சென்று, மாம்சசிந்தை அறிந்து கொள்ளக் கூடாதவைகளை அறிந்து கொள்வதற்கென தேவனால் நியமிக்கப்பட்டவர். அது தேவனுடைய இரகசியங்களை வெளிப்படுத்தி, ஏற்கனவே நடந்தவைகளை அறிவித்து, இனி நடக்கப்போகும் காரியங்களை முன்னறிவிக்கிறது. அது என்ன? தேவன்,மனித தோலின் பின்னால் தேவன் முற்றிலும் உண்மை! 39சாம் கான்னலி டூசானில் வசிக்கிறார். அவர் அநேக ஆண்டுகளுக்கு முன்பு திரு. கிட் என்பவருடன் இங்கு வந்து, பல ஆண்டுகளாக அவருக்கிருந்த குடற்புண் நீங்கி குணமடைந்திருக்கிறார். கடந்த இலையுதிர் காலத்தில் நான் சென்றிருந்த போது, சாமின் குடலில் ஒரு கல் உண்டாயிருந்தது. டூசானிலுள்ள மருத்துவ நிபுணர் பரிசோதித்து பார்த்த போது, அது கோலி அளவு பெரியதாயிருந்தது. சகோ. சாம் கான்னலி... இங்குள்ள உங்கள் அநேகருக்கு அவரைத் தெரியும்; அவர் ஒஹையோவைச் சேர்ந்தவர். அவர் மருத்துவரிடம் சென்ற போது, மருத்துவர் அவரிடம், ''சாம், அடுத்த வாரம் ஆயத்தமாயிருங்கள். அறுவை சிகிச்சை செய்து அந்த கல்லை வெளியே எடுத்து விடுகிறேன்'' என்றார் (இன்னும் சில நாட்களில்) அவர், “டாக்டர், அது மலத்தில் வந்து விடாதா?” என்று கேட்டார். மருத்துவர், “அதுமுடியாது. கல் மிகவும் பெரியது'' என்றார். மருத்துவர் அவரைக் காரில் கொண்டு போய் வீட்டில் சேர்த்தார். சாம் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, ''நீங்கள் வந்து எனக்காக ஜெபிக்க வேண்டும், சகோ. பிரன்ஹாமே'' என்றார். இதற்காக அவர் ஏன் என்னை தொலைபேசியில் கூப்பிட வேண்டும்? நான் அவருக்காக ஜெபிக்கத் தொடங்கினேன். நான் ''சாம், கர்த்தர் உரைக்கிறதாவது. கல் தானாகவே வெளி வந்து விடும்'' என்றேன். அடுத்த நாள் அவர் கல்லை மருத்துவரிடம் கொண்டு சென்றார். மருத்துவர், “திரு. கான்னலி, இது எப்படி நடந்ததென்று எனக்குப் புரியவேயில்லை'' என்றார். அவர், ''நான் தேவனை விசுவாசிக்கிறவன், அந்த கல் என்னிலிருந்து வெளியே வரும்படி தேவன் செய்தார்' என்றார், அந்த மருத்துவரால் நம்பவே முடியவில்லை - என் மனைவியின் இடுப்பிலிருந்து அந்த பெரிய கட்டி மறைந்த போது மருத்துவரால் எப்படி நம்ப முடியவில்லையோ, அதே விதமாக, அதைப் பற்றி உங்களுக்குத் தெரியும். பாருங்கள்? எனவே அவர் சொன்னார். 40ஏறக்குறைய ஆறு மாதங்கள் கழித்து - அதாவது இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு, சாம் கான்னலி இருதயக் கோளாறின் காரணமாக அதிக நோய்வாய்ப்பட்டார் (அதன் பெயர் எனக்குத் தெரியவில்லை 'கரானரி' அல்லது ஏதோ ஒரு விதமான இருதய அடைப்பு, அப்படி ஏதோ ஒன்று, அது மிகவும் ஆபத்தானது. அது.... அதிலிருந்து மீள முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்). அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய இருதயத்தில் இரத்த ஓட்டம் அடைபட்டது. அவருடைய கால்கள் வீங்கிப்போய், அவருடைய கணுக்கால்கள் அவருடைய தொடையைக் காட்டிலும் பெரிதாகி விட்டன. அவரை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். மருத்துவர், ''அவரை சமாதானத்துடன் வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள், அல்லது மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள்'' என்றார். சாம், ''எனக்கு மருத்துவமனைக்குப் போகப் பிரியமில்லை'' என்றார். மருத்துவர், அவரை வீட்டுக்குக் கொண்டு சென்று படுக்க வையுங்கள். ஆறு மாத காலம் அவர் தலை, கால், கை எதையும் அசைக்கக் கூடாது. அவர் எந்த நேரத்திலும் மரிக்கக் கூடும்'' என்றார். 41சகோ. நார்மன் என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டார். அன்றிரவு நாங்கள் சகோ. சாமைக் காணச் சென்றோம். அவருக்காக நாங்கள் ஜெபித்தபோது கர்த்தர் பேசினார். அடுத்த நாள் காலையில் சாம் மருத்துவரின் அலுவலகத்துக்குச் சென்று அவருடைய முன்னிலையில் நின்று, கட்டுப் போட்டிருந்த அவருடைய கால்களை அவிழ்த்து, “டாக்டர், என்னைப் பாருங்கள்'' என்றார். மருத்துவர் அவருடைய இருதயத் துடிப்பை இயந்திரத்தில் பதிவு செய்து பார்த்து விட்டு (electrical cardiogram), “எனக்கு புரியவேயில்லை. நீங்கள் மறுபடியும் வேலைக்குச் செல்லலாம்” என்று கூறி விட்டு, “நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர்?'' என்று கேட்டார். அவர், “எந்த சபையும் இல்லை'' என்று விடையளித்தார். மருத்துவர், ''எந்த ஒரு ஸ்தாபனத்தையும் சேராமல் நீங்கள் கிறிஸ்தவராக இருக்க முடியாதே. நீங்கள் ஏதாவதொரு ஸ்தாபனத்தை சேர்ந்திருக்க வேண்டுமே'' என்றார். பாருங்கள், மருத்துவருக்கு அவ்வளவு தான் தெரியும். சாம் அவருக்கு 'நட்'டாக காணப்பட்டார். அவ்வாறே மருத்துவரும் அப்படிப்பட்ட கேள்வி கேட்டதனால் சாமுக்கு 'நட்'டாக காணப்பட்டார். பிறகு என்ன நேர்ந்தது? சாம் என்னிடம் வந்து, ''சகோ. பிரன்ஹாமே, அப்படிப்பட்ட கேள்வி கேட்கும் ஒருவருக்கு நான் என்ன பதில் கூறவேண்டும்?“ என்று கேட்டார். நான், “அவர்களிடம் நீங்கள் ஒரே ஒரு சபையை சேர்ந்திருப்பதாக கூறி விடுங்கள். நீங்கள் அதில் சேர்வதில்லை. அது ஒரு ஸ்தாபனமல்ல. அதில் நீங்கள் பிறக்கின்றீர்கள்'' என்றேன். 42ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு ஸ்திரீ சகோதரி நார்மனின் மேல் சாய்ந்துகொண்டு (அவளுடைய பெயர் எனக்கு மறந்து விட்டது); அவள் மிகவும் அழகுள்ளவள், ஏறக்குறைய முப்பது வயதிருக்கும். அவளும் கணவனும் பிரிந்திருந்தனர். அவளுக்கு இரத்தப் புற்றுநோய் கண்டு மிகவும் மோசமான நிலையில் நடக்கவும் கூட முடியாதிருந்தாள். அது மிகவும் மோசமடைந்து, மருத்துவர்கள் அவளைப் படுக்கையில் போட்டனர். மருத்துவர்கள் அவளுக்கு சிகிச்சையளித்து வந்து முடிவில்.... அவள் அடுத்த புதன் கிழமை வரைக்கும் மாத்திரமே உயிரோடிருப்பாள் என்று அறிவித்தனர். திருமதி. நார்மன் எப்படியோ அவளைப் படுக்கையிலிருந்து தூக்கி கொண்டு வந்து நாற்காலியில் உட்கார வைத்தார்கள். அந்த சிறுவன் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தான். அவள் சாம்பல் நிறமுள்ளவளாகக் காணப்பட்டாள். இரத்தப் புற்றுநோய் காரணமாக அவளுடைய தோல் மஞ்சள் நிறமாயிருந்தது. நான் சகோதரியே, “உனக்காக நான் ஜெபிக்கப் போகிறேன்'' என்றேன். அவள் பேச முயன்றபோது, கண்ணீர் கண்களிலிருந்து பெருகினது. அவள், “நான்...' என்றாள். நான், 'நீ கிறிஸ்தவளா?' என்று கேட்டேன். அவள், “நான்மெதோடிஸ்டு'' என்றாள். நான், “நீ கிறிஸ்தவளா என்று தான் நான் கேட்டேன்” என்றேன். அவள், “நான் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவளா என்றா கேட்கிறீர்கள்?'' என்றாள். நான், “இல்லை, அம்மணி, நீ தேவனுடைய ஆவியினால் பிறந்து, கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறாயா என்று தான் கேட்கிறன்'' என்றேன். அவள், “நான் எப்பொழுதுமே ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவள்'' என்றாள். நான், ''தேவன் உன்னை உயிரோடு வைத்தால், நீ என்னிடம் மறுபடியும் வந்து கர்த்தருடைய வழியை இன்னும் தெளிவாக உனக்குக் காண்பிக்க எனக்குத் தருணம் அளிப்பாயென்று வாக்கு கொடுப்பாயா?'' என்றேன். அவள், ''நான் தேவனுக்கு எதையும் வாக்கு கொடுக்க ஆயத்தமாயிருக்கிறேன். அவர் என் உயிரைக் காப்பாற்றினால், அவரை நான் சேவிப்பேன்“ என்றாள். அப்பொழுது எனக்கு ஒரு தரிசனம் உண்டானது. நான் ''கர்த்தர் உரைக்கிறதாவது. மரணத்துக்காக ஆயத்தப்படாதே. நீ நாளை கழித்து மரிப்பதற்காக ஆயத்தம் பண்ணியுள்ளவை அனைத்தையும் கிழித்தெறிந்து விடு (அது திங்கட்கிழமை, அவள் புதன்கிழமை மரிக்க வேண்டியவள்). நீ மரிக்கப் போவதில்லை'' என்றேன். போன ஞாயிறன்று - இந்த ஞாயிறுக்கு முந்தின ஞாயிறு - நான் அவளுடன் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவளுடைய எடையில் முப்பது சொச்சம் பவுண்டு கூடினது. அவள் உடலில் இரத்தப் புற்று நோய் சிறிதளவும் கூட காணப்படவில்லை என்று மருத்துவர் கூறினார். அவள் கர்த்தருடைய வழியை அறிய விரும்பினாள் (ஒரு நீர்ப்பாசன குளத்தில் அவள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறும்படியாக அவளை அனுப்பினேன். அவள் ஒருக்கால் 'நட்'டாக இருக்கலாம், ஆனால், நான் ''உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்'' 43இங்கு ஒலிநாடா பதிவு செய்யும் பையன் லியோ மெர்சியர் வீட்டுக்கு விஜயம் செய்திருந்தேன். அங்கு சிலருக்காக நான் ஜெபித்தேன். லோகார் என்னும் பெயருடைய பெண்ணுக்கும் ஜெபித்தேன் - அதுதான் அவள் பெயர் என்று நினைக்கிறேன். அவளுக்கு ஏற்கனவே பதினான்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை நடந்திருந்தது. மருத்துவர்கள் அவளைக் கைவிட்டு அவள் மரித்து போவாள் என்று கூறியிருந்தனர். அவளுக்காக நான் ஜெபத்தை ஏறெடுத்து, அவள் மரிப்பதில்லை என்றும் அவள் உயிர் வாழ்வாள் என்றும் கூறினேன். அவள் உடலில் சிறிதளவு புற்று நோயும் கூட எங்கும் காணப்படவில்லை. அதன் விளைவாக அவளுடைய குடும்பத்தில் இருபத்தெட்டு பேர் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றனர். ஒருக்கால் 'நட்'டாக இருக்கலாம், ஆனால் அது வரக்கூடிய எல்லாரையும் அவரிடம் இழுத்துக் கொள்கிறது. அது வார்த்தையுடன் மறையினால் இணைக்கப்பட்டுள்ளது. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? 44நேற்றைய முந்தின நாள் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அது என் ஃபைலில் உள்ளது. சென்ற இலையுதிர் காலத்தின் போது நான் வேட்டை பயணத்தை மேற்கொண்டபோது... அது ஓராண்டுக்கு முன்பு வசந்த காலத்தின்போது ; ஆஸ்கர் என்னும் பெயர் கொண்ட சிகப்பு இந்திய பையனுடன் நாங்கள் நெடுஞ்சாலையில் வேட்டைக்கு சென்றிருந்தோம். அங்குதான் கர்த்தருடைய தூதன் அந்த 'கரிபு' என்னும் கலைமானையும் வெள்ளி முனை கொண்ட சாம்பல் நிற கரடியையும் அங்கு தோன்றப் பண்ணுவதாக வாக்களித்திருந்தார் (அதைக் குறித்து இங்கு உங்களிடம் ஏற்கனவே கூறியுள்ளேன்). அது உங்களுக்கு ஞாபகமிருக்கும். நான் உள்ளே வந்தபோது அந்த பையன்... அவன் கூடாரத்துக்குள் வந்தான். சகோ. பட் உண்பதற்கு முன்பு என்னை ஜெபம் செய்யக்கேட்டுக் கொண்டபோது, (இந்த பையன் கையுறைகளை அப்பொழுது கழற்றி வைத்திருந்தான். அவன் குதிரைசவாரி செய்பவன்). அவன் கையுறைகளைப் போட்டுக்கொண்டு புறப்பட ஆயத்தமானான். அவன் ஒரு கத்தோலிக்கன். அவன் ஜெபத்துடன் எவ்வித தொடர்பும் கொள்ள பிரியப்படவில்லை. இது சென்ற வசந்த காலத்தின் போது. 45சென்ற இலையுதிர் காலத்தில் அவன். அவனுடைய தாய் மாரடைப்பால் மரணத் தருவாயிலிருந்தபோது அவன் என்னிடம் வந்து என் அருகில் நின்று, ''நீங்கள் வந்து என் தாய்க்கு ஜெபம் செய்யமாட்டீர்களா?' என்று வருந்திக் கேட்டுக்கொண்டான். நான் இந்தியர்கள் வசிக்கும் அந்த குடிலை அடைந்தேன். அவர்கள் எல்லோரும் அவனுடைய தாயைச் சுற்றிலும் இருந்தனர். அவள் மரித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேசத் தெரியாது. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து, ஒரு மொழி பெயர்ப்பாளரின் மூலம் - அது அவளுடைய மகன் - அவனுடைய தாயிடம், அவளுடைய பெயரைக் கூறி, அவளுக்கு என்ன நேர்ந்ததென்றும், அவள் வம்சம் என்னவென்றும், என்ன நடக்குமென்றும் கூறினார். அவன் தாய் உடனே குணமடைந்தாள். அடுத்த நாள் அவர்களைக் காண நான் சென்றிருந்தேன். ஒரு ஆட்டிற்காக நான் நாற்பது மைல் காரோட்டி செல்ல வேண்டியதாயிருந்தது. அவர்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவள் நீர் எருமை (moose) இறைச்சியை உலர்த்துவதற்காக குதிரையின் மேல் ஏறிக் கொண்டிருந்தாள், நான் அவளிடம், ''லூயில், சென்ற இரவு நான் ஜெபித்தபோது நான், 'பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே' என்று கூறினேன். அது கத்தோலிக்கர்களின் ஜெபமாதலால், நீங்களும் அந்த ஜெபத்தைக் கூறினீர்கள். நீங்கள் அதைக் கூறும்படி நான் விட்டுவிட்டேன். இப்பொழுது நான் தேவனுக்கு நன்றி செலுத்தப் போகின்றேன். நாங்கள் ஜெபங்கள் உச்சரிப்பதில்லை, நாங்கள் ஜெபிக்கின்றோம்'' என்றேன். அவள், “நாங்கள் இப்பொழுது கத்தோலிக்கர்கள் அல்ல. நீங்கள் விசுவாசிப்பது போலவே நாங்களும் விசுவாசிக்கின்றோம். எங்கள் எல்லோரையும் நீங்கள் கொண்டு சென்று, நீங்கள் ஞானஸ்நானம் கொடுக்கும் விதத்தில் எங்களுக்கும் ஞானஸ்நானம் கொடுங்கள். நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறோம்'' என்றாள். 46திரும்பி வரும்போது... அந்த பையன் தன் குதிரைகளை அநேக மாதங்களுக்கு முன்பு இழந்து போய், அவனால் அவைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை, வழிகாட்டி அவனிடம் ''ஆஸ்கர், நீ குதிரைகளை அப்படி அவிழ்த்து விட்டிருக்கக் கூடாதென்று உனக்கு தெரிந்திருக்க வேண்டும். சாம்பல் நிறமுள்ள கரடிகள் இந்நேரம் அவைகளை தின்றிருக்கும்'' என்று சொல்லி விட்டான். அவன் என் அருகில் நின்று - ஓரிரவு அவன் என்னிடம், ''உங்களிடம் ஒன்றைக் கேட்கலாமா?'' என்றான். நான், “கேள்'' என்றேன். அவன், ''சகோ. பிரன்ஹாமே, தேவன் என் குதிரைகளைத் திரும்பத் தரும்படி அவரிடம் ஜெபியுங்கள்''என்றான். நான் “கரடிகள் அவைகளைத் தின்றிருக்கும் என்று பட் கூறுகிறாரே'' என்றேன். அவன், ''சகோ. பிரன்ஹாமே, தேவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். தேவன் ஆஸ்கருக்கு குதிரைகளை திரும்ப அளிப் பார்'' என்றான். நான், 'ஆஸ்கர், அப்படி நீ விசுவாசிக்கிறாயா?'' என்றேன். அவன், “நான் விசுவாசிக்கிறேன். என் தாயை குணமாக்கின தேவனுக்கு: கரடி எங்கே என்று உங்களிடம் கூற முடிந்த தேவனுக்கு; வேட்டை பொருள் எங்குள்ளது என்று கூற முடிந்த தேவனுக்கு, என் குதிரைகள் எங்குள்ளன என்று கூற முடியும்'' என்றான். 47ஓராண்டிற்கு முன்பு நான் ஃபிரட் சாத்மனுடனும் (அவர் இன்றிரவு இங்கிருக்கிறார்) என் மகன் பில்லி பாலுடனும் நின்று கொண்டிருந்தபோது பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார். நான், ''ஆஸ்கர், உன் குதிரைகளைக் கண்டு பிடிப்பாய். அவை பனிக்கட்டியில் நின்று கொண்டிருக்கும்'' என்றேன். இதோ போன வாரம் அவன் எழுதின கடிதம் என் வசம் உள்ளது. அது எனக்கு வெள்ளியன்று கிடைத்தது. இங்கு வந்தது... அது இப்பொழுது அந்த ஃபைலில் உள்ளது. அவன், ''சகோ. பிரன்ஹாமே, ஆஸ்கர் குதிரைகளை பனிக்கட்டியில் நின்று கொண்டிருக்கக் கண்டான்'' என்று எழுதியிருந்தான். அவை எப்படி உயிரோடிருந்தன என்று யாருக்குமே தெரியவில்லை. அவை.... அந்தப் பையன். ஆண்டின் இந்த நேரத்தில், ஜூன் மாதத்தில், பனிக்கட்டி இருப்பது அல்லது முப்பது அடி உறைந்து கிடக்கும். குளிர்காலத்தில் அவை எப்படி அந்த மலைக் கணவாயில் தங்கின ஆஸ்கர் பனிக்கட்டி காலணிகளை (snowshoes) அணிந்து அங்கு செல்லமுடியும். ஆனால் அவன் குதிரைகளுக்கு பனிக்கட்டி காலணிகளை அணிவிக்கமுடியாது. அவன் தேவனுடைய வார்த்தை உரைத்தபடி அவைகளை அங்கு கண்டான். அது ஒருக்கால் “நட்டாக” ஒலிக்கலாம்; ஒருமுறை அதை விசுவாசித்துப் பாருங்கள். உங்கள் மறை எப்படியுள்ளது என்பதை அது பொறுத்தது. 48அது ஸ்தாபனங்களுடன் மறை சேராது. அது வார்த்தையுடன் மாத்திரமே மறை சேரும். உலகில் சில மக்கள் அந்த வார்த்தையை விசுவாசிக்கின்றனர். அந்த மணவாட்டியை இங்கிருந்து கொண்டு சென்று மணவாளனுடன் சேர்க்க ஒரு 'நட்' அவசியமாயுள்ளது. ஏனெனில் மணவாளனும் மணவாட்டியும் ஒருவரே... தேவன் ஒருவரே, வார்த்தையே தேவன். அது வார்த்தையுடன் மறை சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது அது மணவாட்டியை அந்த ஸ்தாபனங்களிலிருந்து வெளியே இழுத்துவிடும். ஆம், அவர் என்னில் குற்றம் கண்டு பிடிக்கப் பார்த்தார். உங்களுக்கு தெரியுமா, இன்று காலை தேவன் தோல்களுக்கு பின்னால் -மனிதனின் தோலுக்குப் பின்னால் - மறைந்து கொண்டிருத்தலைக் குறித்துப் பேசினது எனக்கு ஞாபகம் வருகிறது. 49ஒரு சிறு கதையைக் கூறி முடித்து விடுகிறேன். நாற்பத்தைந்து நிமிடங்கள் உங்களை வைத்துக் கொண்டதற்காக வருந்துகிறேன். அது ஒரு வீடு; கிறிஸ்தவ வீடு. அங்கு ஒரு... (இதை நான் குற்றம் கண்டு பிடிக்கப் பார்த்த அவரிடம் கூறினேன்). அந்த வீட்டில் அவர்கள் தேவன் பேரில் விசுவாச முள்ளவர்களாய் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு சிறு பையன் இருந்தான். அவனுக்குப் புயல் என்றால் மிகவும் பயம். மின்னல், ஓ, அவனுக்கு மரணத்துக் கேற்ற பயத்தை விளைவித்தது. மின்னல் அடித்தால், அவன் மேசையின் கீழ் ஒளிந்து கொள்வான். ஒரு இரவு அவர்கள் வசித்த பண்ணையில் பயங்கரமாக புயல் வீசியது. நள்ளிரவின் போது, மரங்கள் காற்றில் அசைந்தன , மின்னல் பயங்கரமாக அடித்தது. அம்மா மகனிடம், ''மகனே, மாடியில் சென்று படுத்துக்கொள், பயப்படாதே'' என்றாள். எனவே சிறுவன் இரவு உடைகளை அணிந்து, திரும்பிப் பார்த்து அழுது கொண்டே படிக்கட்டுகளில் ஏறி மாடியை அடைந்து, படுக்கையில் படுத்து, தலையைப் போர்வையினால் மூடி உறங்க முயன்றான். அவனுக்கு உறக்கம் வரவில்லை. ஜன்னலின் வழியாக மின்னல் உள்ளே வந்து கொண்டிருந்தது. அவன், ''அம்மா, இங்கு வந்து என்னோடு படுத்து உறங்குங்கள்' என்றான். அவளோ, “மகனே, அது உன்னை கஷ்டப்படுத்தாது, அந்த மின்னல் உன்னை சேதப்படுத்தாது'' என்றாள். அவன், “ஆனாலும் அம்மா, இங்கு வந்து என்னோடு படுத்து உறங்குங்கள்'' என்றான். எனவே அம்மா படிக்கட்டுகளில் ஏறி மாடிக்குச் சென்று மகனுடன் படுத்துக்கொண்டாள். அவள், “மகனே, அம்மா உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நாம் ஒரு கிறிஸ்தவக் குடும்பம். நாம் தேவன் பேரில் விசுவாசம் கொண்டவர்கள். தேவன் நம்மை புயலின் ஆபத்திலிருந்து காக்க வல்லவர் என்று நாம் விசுவாசிக்கிறோம். தேவன் தமக்குச் சொந்தமானவர்களைக் காக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். மகனே, நீயும் அப்படி விசுவாசிக்கவேண்டும், நீ பயப்படக்கூடாது. தேவன் நம்மோடு கூட இருக்கிறார். அவர் நம்மைக் காப்பார்'' என்றாள். சிறுவன் சில முறை மூக்கை சொறிந்து, அம்மா, நானும் அதை விசுவாசிக்கிறேன். ஆனால் மின்னல் ஜன்னலுக்கு அருகில் வரும்போது, தேவன் அதற்கு தோலை உடுத்துவித்தால் நலமாயிருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது'' என்றான். வயது வந்தவர்களாகிய நம்மில் பெரும்பாலரும் கூட அப்படித்தான். எண்ணுகிறோம் - தேவனுக்கு தோலிருந்தால் நலமாயிருக்கும் என்று. அது உலகிற்கு 'நட்டைப்' போல் ஒலிக்கும். ஆனால் அது எல்லாரையும் அவரிடம் இழுத்துக் கொள்கிறது. ஜெபம் செய்வோம். 50பரலோகப் பிதாவே, அனுபவமுள்ள இந்த சிறு கதைகள்... இவை ஒரு காரணத்துக்காகவே உண்டாகின்றன... அது பக்குவமற்றதாக ஒலித்தாலும், அதிலிருந்து நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியதை அது புரிந்து கொள்ளும்படி செய்கிறது. தேவன் எங்களுக்குள் வாசம் செய்ய முடிவதற்காக, கர்த்தாவே, இன்றிரவு உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களுடைய பாவ பரிகாரத்துக்காக நீதி பரராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். தேவத்துவத்தின் பரிபூரணம் அவருக்குள் சரீரப் பிரகாரமாக வாசம் செய்தது. அவர் வாழ்ந்து அந்த ஷெகினா மகிமையில் நாங்கள் அவருடைய பிரசன்னத்தின் நிறைவை அனுபவித்து வாழ வேண்டும் என்பதற்காகவும், எங்கள் ஆத்துமாக்கள் அவருடைய இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டு, அந்த மகத்தான பரிசுத்த ஆவி எங்களுக்குள் வாசம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அவர் தமது விலையேறப்பெற்ற ஜீவனை ஈந்தார் - பலவந்தமாக அது அவரிடமிருந்து பிடுங்கப்படவில்லை, அவர் மனப்பூர்வமாக அதை ஈந்தார். கர்த்தாவே நாங்கள் தேவையுள்ளோருக்கு போதகர்கள் தீர்க்கதரிசிகள் போன்றவர்களாகின்றோம் - அவை தேவனுடைய வரங்கள், தேவன் தாமே இந்த நவீன காலத்தில் தம்முடைய மகத்தான வரங்களை வெளிப்படுத்தி பிரகாசிக்கச் செய்கிறார். 51கர்த்தாவே 'நட்' என்னும் இந்த பக்குவமில்லாத (crude) சொல்...... இந்நாளில் சபை சீர்குலைந்த நிலையில், சபைகளையும் ஸ்தாபனங்களையும் சேர்ந்து கொள்ளவேண்டும் என்னும் கருத்து நிலவுகின்ற வேளையில்... வார்த்தையுடன் வரும் ஒரு மனிதன் 'நட்'டாக, பைத்தியக்காரனாக எண்ணப்படுகிறான், வேத சாஸ்திரியாக, ஆசாரியனாக ஆவதற்கு பயிற்சி பெற்ற அந்த மகத்தான அப்போஸ்தலனாகிய பவுல், தேவனுடைய மகிமைக்கென்று பைத்தியமானதாகக் கூறுகிறான். அவனுடைய பக்குவமுள்ள சொற்களை ஜனங்கள் கேட்கக் கூடாதென்று எண்ணி அவன் தன் கல்வியைத் துறந்தான். அவன் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனத்தோடு வரவில்லை என்கிறான். ஏனெனில் அவன் அப்படி வந்திருந்தால் அவர்களுடைய விசுவாசம் அதில் மாத்திரமே நிலைத்திருக்கும். ''நான் போன பின்பு மந்தையைத் தப்பிவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்''. (அப். 20:29) அவன் தீர்க்கதரிசனம் உரைத்தது எவ்வளவாக இக்காலத்தில் நிறைவேறி சபையானது மனித ஞானத்திற்கு திரும்பியுள்ளது. அவர்களுடைய விசுவாசம் தேவனில் நிலைத்திருக்கும்படி பவுல் பரிசுத்த ஆவியின் வல்லமையோடும் அற்புதங்களோடும் அவர்களிடம் வந்ததாக கூறுகிறான். பிதாவே, இயேசுவை அறிந்து கொள்ள அவன் இவ்வுலகத்திற்குப் பைத்தியமானான். கர்த்தாவே, இன்றைக்கு நாங்களும் அப்படித்தான் ஆகியிருக்கிறோம். இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் மக்கள் பைத்தியக்காரராக எண்ணப்படுகின்றனர். ஆனால் அவர்களோ தங்கள் சுகத்திற்கு, தங்கள் நித்திய ஸ்தலத்திற்கு தேவனை விசுவாசிக்க ஆயத்தமாயுள்ளனர். அவர்கள் அவரை ஆராதிப்பதற்கென தங்கள் புகழையும். பணயம் வைத்து, அவருக்கு நன்றி செலுத்தி, அவரை ஸ்தோத்தரித்து, அவர்களுடைய ஆவிக்கு சுதந்தரத்தையளித்து தேவனை வழிபடுகின்றனர். அவர்கள் பைத்தியமெனக் கருதப்படுகின்றனர். ஆனால் நீரோ, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது (நாங்கள் பைத்தியமாயிருந்தால்) மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது என்று கூறியிருக்கிறீர்; ஏனென்றால் மனிதன் சுய ஞானத்தினால் தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே இரட்சிக்கப்படக் கூடியவர்களை இரட்சிக்க தேவனுக்கு பிரியமாயிற்று. தேவனே, இந்த வார்த்தையை எழுதின மகத்தானவர் தாமே இன்றிரவு வந்து, வியாதியஸ்தர்களை சுகப்படுத்தி, இழந்து போனவர்களை இரட்சிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 52இன்றைக்கு நான் கூறினதைக் குறித்து நீங்கள் குழப்ப மடையக் கூடாதென்று எண்ணி, நான் தேவனை ஒரு வைரத்துக்கு ஒப்பிடுகிறேன்.... நித்தியமான தேவன் ஒரு பெரிய வைரம். வைரம் ஆப்பிரிக்காவின் சுரங்கத்திலுள்ள நீல கற்களிலிருந்து வெளியே கொண்டு வரப்படும்போது... நான் அந்த சுரங்கத்துக்கு சென்று, அவர்கள் எப்படி கற்களை உடைக்கும் இயந்திரத்தில் போட்டு கற்களை உடைத்து வைரத்தை வெளியே எடுக்கின்றனர் என்பதை கண்டிருக்கிறேன், அந்த நீல வைரங்களும், கறுப்பு வைரங்களும் வெளியே வருகின்றன. அந்த நிலையில் அவைகளுக்கு உருவம் எதுவும் இல்லை. அவை ஒரு பெரிய கல் மாத்திரமே. அப்பொழுது அவைகளுக்கு பிரகாசம் எதுவுமில்லை. அவை பெரும்பாலும் உருண்டையான, வழவழப்பான வைரக் கல் மாத்திரமே. ஆனால் இந்த வைரம் பட்டை தீட்டப்பட வேண்டும். அவை பட்டை தீட்டப்படாமலிருப்பது சட்ட விரோதமானது. அவை பட்டைத் தீட்டப்படவேண்டும். அவைகளை நீங்கள் எங்கே வாங்கினீர்கள் என்பதற்கு உங்களிடம் ரசீது இருக்க வேண்டும், ஏனெனில் அவை லட்சக்கணக்கான டாலர்கள் விலை மதிப்புள்ளவை. நான் தேவனை வைரத்துக்கு ஒப்பிடுகிறேன். வைரத்துக்குள் இருக்கும் பிரகாசம் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக அது பட்டை தீட்டப்படுகிறது. அது எல்லா சிறு வடிவங்களிலும், முக்கோண வடிவில் பட்டை தீட்டப்பட வேண்டும். வைரத்தை முக்கோண வடிவு பட்டைகளில் தீட்டும் போது, அதன் மேல் ஒளி விழும் போது, அது ஏழு வர்ணங்களாக சிதறும் (பாருங்கள்?), ஏழு வர்ணங்கள். 53இப்பொழுது கவனியுங்கள், தேவன் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார், நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார் (பாருங்கள்?). அவர் வரங்களை சபைக்கு பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக, அந்த பெரிய வைரம் வெட்டப்பட்டு நொறுக்கப்பட்டது. அது ஒளியல்ல, ஏனெனில் சூரிய ஒளி அதன் மேல் படாதிருக்கும் போது அது எங்கிருந்து வெட்டப்பட்டதோ, அங்கு திரும்பிச் செல்ல வேண்டும். அது வெட்டப்பட்ட இடத்தில் கிடைக்கும் சிறு துணுக்குகளும் கூட தூரப் போடப்படுவதில்லை. அவை உபயோகப் படுகின்றன. அவை கிராம் போன் ஊசிகளாக செய்யப்படுகின்றன. அந்த வைரத்திலிருந்து வெட்டப்பட்ட துணுக்கு ஊசிகள், பதிவு செய்யப்பட்ட இசைத் தட்டிலிருந்து இசையைத் தோன்றச் செய்கின்றன. நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதென்று நம்புகிறேன். அதுபோன்று கிறிஸ்துவிலிருந்து உண்டான துணுக்கை - கிறிஸ்துவிலிருந்து வந்த வரத்தை - வேதாகமத்தின் மேல் வைக்கும் போது, அது விசுவாசிக்கு மறைக்கப்பட்டுள்ள தேவனுடைய இரகசியங்களை வெளிப்படுத்தித் தருகிறது. அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிந்திருக்கிறார். அவர் ஒவ்வொரு நபரையும் அறிந்திருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அந்த வைரத்துணுக்கு ''நான் யாரென்று பார்த்தாயா?'' என்று கூறுவதில்லை. அது எதிலிருந்து வந்ததோ அது தான் முக்கியம் வாய்ந்தது. ஒரு வைரத் துணுக்கும் வைரம் தான். ஏனெனில் அது வைரத்திலிருந்து தோன்றினது. 54அப்படித்தான் ஆவியின் வரங்களும் ஒரு மனிதனுக்கு உள்ளன, அது வைரத்தின் ஒரு பாகம். அது கீழே அனுப்பப்பட்டு, ஒரு வாரமாக விளங்கி, அர்த்தம் உரைத்து, போதித்து, கற்பிக்கிறது. ஆவியின் வரங்கள் ஐந்தாகும். அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள், சுவிசேஷகர்கள். இவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் சரீரம் சீர் பொருந்துவதற்காக அளிக்கப்பட்டவர்கள். போதகர்களும், மேய்ப்பர்களும் இருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக தீர்க்கதரிசிகளும் இருக்க வேண்டும். அது நமக்குத் தெரியும். கடைசி காலத்தில் தேவன் தெரிந்து கொள்ளப்பட்ட வித்துக்களாகிய தமது ஜனங்களின் மத்தியில் தீர்க்கதரிசியின் உருவில் தோன்ற வேண்டும் என்று வேதம் கூறுகிறது. அது வார்த்தையுடன் ஒத்துப் போகும் ஒன்று, அந்த மனிதன் தேவன் அல்ல, ஆனால் அந்த வரம் தேவன் (பாருங்கள்?); அது தான் கிராமபோன் ஊசி, ஒரு சாதாரண ஊசியை உபயோகித்தால், இசைத் தட்டிலிருந்து இசை எழும்பாது. ஆனால் வைரத்தினால் ஆன ஊசி மாத்திரமே அதற்கு சிறந்தது. அது மாத்திரமே தெளிவாக இசையைத் தோன்றச் செய்கிறது. தேவன் தாமே இன்றிரவு... உங்கள் வாழ்க்கை என்னும் இசைத்தட்டில், உங்களுக்கு என்ன கோளாறு இருந்தாலும், நீங்கள் தேவனிடம் எதை வாஞ்சித்தாலும், தமது கரங்களில் கிராமபோன் ஊசியை ஏந்திக் கொண்டிருக்கும் அந்த பெரிய எஜமான் தாமே, உங்கள் வாழ்க்கை என்னும் இசைத் தட்டின் மேல் அந்த ஊசியை வைத்து நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் என்றும், உங்களுக்கு என்ன தேவை என்றும் எங்களுக்கு வெளிப்படுத்தித் தருவாராக. அப்பொழுது அவர் இங்கிருக்கிறார் என்று நாம் அறிந்து கொள்வோம். 55பரலோகப் பிதாவே, இந்த ஜெப வரிசையை நான் தொடங்கும் முன்பு, நீர் இங்கிருக்கிறீர் என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ள அதை அருளுவீரா? ஜெபம் ஏறெடுக்கப்படுவதற்காக அந்நியர்கள் இங்கு இருக்கக் கூடும். அவர்களை நான் அறியேன். ஆனால் நீர் அறிவீர். பவுல் கூறின வண்ணமாக ''நாங்கள் அந்நிய பாஷைகளில் பேசி அதற்கு அர்த்தம் உரைக்காமல் போனால், ஜனங்கள் எங்களை பைத்தியம் என்று சொல்வார்கள். ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்து இருதயத்திலுள்ள இரகசியத்தை வெளிப்படுத்தினால், அவர்கள் “உண்மையில் தேவன் உங்களோடு கூட இருக்கிறார் என்பார்கள்''. தேவனே தாமதமான இந்நேரத்தில் மறுபடியும் அவ்வாறே நடக்கட்டும். அதை நீர் வாக்களித்திருக்கிறீர், அது அப்படியே ஆகக்கடவது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 56இப்பொழுது, இன்றிரவு இங்கு எத்தனை வியாதியஸ்தர் உள்ளனர் என்று வியக்கிறேன்.... பில்லி ஜெப அட்டைகளை விநியோகித்தானா? ஜெப அட்டைகள் கொடுக்கப்பட்டனவா? கொடுக்கப்பட்டுள்ளது. நல்லது, வியாதியஸ்தர் ஒவ்வொருவரும் ஜெப அட்டையை பெற்றுக் கொண்டனர் என்று நினைக்கிறேன். அதில் நீங்கள் என்ன எழுதினீர்கள் என்று எனக்குத் தெரியாது. அவன் அட்டையை மாத்திரம் கொடுத்தான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு விருப்பமானதை அதில் எழுதுங்கள். நீங்கள் அட்டையை மாத்திரம் பெற்றுக் கொண்டீர்களா நீங்கள் என்ன வேண்டுமானாலும் அதில் எழுதுங்கள். உங்களை எனக்குத் தெரியாது. உங்களை எனக்குத் தெரியாது என்று வியாதியாயுள்ள எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? இன்று காலை உங்களில் எத்தனை பேர் தோல்களின் பின்னால் தேவன், மனித தோலின் பின்னால் தேவன் தம்மை திரை மறைத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினதைக் கேட்டோம்'' என்று கூற முடியும்? உங்களுக்கு ஆவிக்குரிய கண்கள் இருந்தால், அவைகளைத் திறந்து அவர் யாரென்று நீங்கள் காணமுடியும். இயேசு, “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்'' என்று கூறியுள்ளதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் 57வியாதியாயிருந்து, உங்களை எனக்குத் தெரியாதென்று அறிந்திருந்து உங்களுடைய கோளாறு என்னவென்று அறிந்திருக்கிறவர்கள், உங்கள் கரங்களையுயர்த்தி, ''நான் வியாதியாயிருக்கிறேன், எனக்குத் தேவையுள்ளது'' என்று கூறுங்கள். எத்தனை பேருக்கு தங்கள் இருதயத்தில் வாஞ்சையிருந்து - வியாதியாயிராமல் வாஞ்சையிருப்பவர்கள்.... சரி கையையுயர்த்தாதவர் யாரையுமே நான் காணவில்லை. இப்பொழுது, எனக்குத் தெரியாது - இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற மனிதனை எனக்குத் தெரியும். அது சகோ. ஜேம்ஸ் நிச்சயமாக அறிவேன். அது சகோதரி ஜேம்ஸ் என்று நினைக்கிறேன். சகோ. பென்னை எனக்குத் தெரியும். சில நேரங்களில் உங்கள் முகங்கள் மாத்திரமே... புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிற அந்த சகோதரன்... ஆனால் அந்த... பின்னால் எங்காவது உள்ள யாராகிலும்..... இந்த அடிப்படையில் இச்செய்தியின் முடிவில் நான் சவால் விடுகிறேன். 58இது கடைசி நாட்களில் நடக்கும் என்று தேவன் வாக்களித்துள்ளார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். பாருங்கள்? அதை நான் நிறை வேற்ற முடியாது. பாருங்கள்? என்னால் அப்படி செய்ய முடியாது. அவர் தான் அதை செய்யவேண்டும். அதை செய்கிறவர் அவரே, நான் அல்ல. ஆனால் நான் அவரை விசுவாசிக்கிறேன். இல்லையென்றால் நான் விசுவாசிக்காத ஒன்றை உங்களிடம் கூறி இங்கு நின்று கொண்டிருக்க மாட்டேன். நீங்கள் ஜெபித்து, ''கர்த்தராகிய இயேசுவே, எங்கள் பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராக இப்பொழுது நீர் இருக்கிறீர் என்று நான் வேதாகமத்தில் போதிக்கப்பட்டுள்ளேன்'' என்று கூறுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள், “உம்மை நான் விசுவாசிக்கிறேன். விசுவாசத்தின் மூலம் இன்றைக்கு நான் இந்த மனிதன் கூறினதை நம்புகிறேன்'' என்று சொல்லுங்கள். அதைத்தான் தூதன் கூறினார்: ''ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்'' என்று. நான் வார்த்தையை எடுத்துரைக்கும் போது, நீங்கள் என்னை விசுவாசிப்பதில்லை. நீங்கள் வார்த்தையை விசுவாசிக்கிறீர்கள். அது வார்த்தையுடன் ஒத்துப் போகவில்லை என்றால், அதை விசுவாசியாதீர்கள். ஆனால் அது வார்த்தையென்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், அது என்னவாயிருப்பினும், நீங்கள் ஜெபித்து விசுவாசித்து, உங்கள் இருதயத்தில் உள்ளதை எனக்கு வெளிப்படுத்துகிறாரா என்று பாருங்கள். “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயுமிருக்கிறது'' என்று வேதம் கூறுகின்றது என்று எவருமே அறிவர். (எபி. 4:12). அந்த விதமாகத்தான் அவர் தேவன் என்று ஆபிரகாம் அறிந்து கொண்டான் - அவருடைய பின் புறத்திலுள்ள கூடாரத்தில் சாராள் என்ன மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள் என்று அவரால் கூற முடிந்த போது, அவர், ''நான் உன்னிடத்தில் வருவேன்'' என்று சொன்னபோது, சாராள் தன் இருதயத்தில் ”அது எப்படி ஆகும்?'' என்று எண்ணினாள். 59அவர் உங்களை குணமாக்க இங்கிருக்கிறார் என்று நான் கூறினேன். அதைக்குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அதை அப்படியே விசுவாசியுங்கள். எனக்கு குறிப்பிட்ட வழி எதுவுமில்லை. அதை பரலோகப்பிதா அறிவார். பாருங்கள்? நான் காணவேண்டும். நான் காண்பதைக் கூறுவேன். நான் காணாததை என்னால் கூற முடியாது. அவர் அவ்வளவாக தேவனாயிருக்கிறார். அவர் அப்படி செய்தால், அது உங்கள் விசுவாசத்தை அதிகரிக்குமா? அப்படி பிரசங்கிப்பது என்னை சற்று அசைக்கிறது, ஆனால் அவர் இங்கிருக்கிறார். அதை நான் அறிந்திருக்கிறேன். அந்த மனிதன் தலை வணங்கின போது அவரை நான் கவனித்தேன். அவருடைய மனைவி அவருடைய பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவளும் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். இதோ இங்கே! உங்கள் இருதயத்தில் ஏதோ ஒன்றுள்ளது. உங்கள் மனைவியும் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். உங்கள் இருதயத்தில் ஒரு பாரம் உள்ளது. அது உங்கள் மாமியாருக்காக, அது உண்மை ! உங்கள் மாமியாருடைய கோளாறு என்னவென்று தேவன் என்னிடம் கூற முடியமென்று விசுவாசிக்கிறீர்களா? உங்களை எனக்குத் தெரியாது. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். அது உண்மையா? அவளுக்கு என்ன கோளாறு என்று தேவன் என்னிடம் கூற முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா? அவள் இங்கில்லை. நான் நீண்ட தூரத்தைக் காண்கிறேன். அவள் கிழக்கில் இருக்கிறாள். அவள் ஓஹையோவில் வசிக்கிறாள். அது உண்மை! அவள் இரத்த நிலையினால் அவதியுறுகிறாள். உங்கள் மனைவி கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கும் உறுமாலைக் கொண்டு போய் அவள் மேல் வைக்கும்படி கூறுங்கள். சந்தேகப்படாதீர்கள். அவள் குணமடைந்து விடுவாள். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்கு ஒரு ஸ்திரீ எனக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் அழுது கொண்டிருக்கிறாள். பிள்ளைக்கு ஏதோ கோளாறு.... எனக்குத் தெரியவில்லை.... இல்லை, அது தவறு. அவளுக்கு ஒரு வாஞ்சையுண்டு. அவள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற வாஞ்சிக்கிறாள். அது கர்த்தர் உரைக்கிறதாவது! பிள்ளையே. விசுவாசி, நீ அதை பெற்றுக் கொள்வாய். 60இங்கு ஒரு ஸ்திரீ வரிசையின் கடைசியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு நான் அந்நியன். அவள் நிழலிடப்பட்டிருக்கிறாள். உனக்கு அறுவை சிகிச்சைகள் நடந்தன. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர் என்று எண்ணுகிறேன். உன்னை எனக்குத் தெரியாது. என்னை குறித்து நீ கேள்விபட்டிருப்பதன் மூலம் என்னை அறிந்திருக்க வழியுண்டு. நீ இந்த இடத்தைச் சேர்ந்தவள் அல்ல. நீ விஸ்கான்ஸினைச் சேர்ந்தவள்- மில்வாகி பட்டினம். உனக்குள்ள கோளாறு புற்றுநோய். அது மார்பில் உள்ளது. அறுவை சிகிச்சைக்கு மேல் அறுவை சிகிச்சை நடந்தும் கூட அது போகவில்லை. அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்ட அந்த விசுவாசம் இப்பொழுதே விசுவாசிக்கட்டும். அது உன் இருதயத்தில் ஆழமாகப்பதியட்டும், அது நிறைவேறும்! நீ விசுவாசி. இங்கு மூலையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதன் அவருடைய தாய்க்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அவர் எனக்கு அந்நியர். அவரை எனக்குத் தெரியாது. இவர் தன் தாய்க்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஸ்திரீக்கு உள்ள கோளாறே அவளுக்கும் புற்றுநோய். அது புற்றுநோயா இருக்குமா என்று அவள் பயப்படுகிறாள். அது புற்று நோய்தான். ஒரு மனிதனுக்காகவும் நீர் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர். அவருக்கு முதுகில் கோளாறு. அவரும் அவர் போதையில் இருப்பதைக் காண்கிறேன், அவர் குடிகாரர். அவர் உம்முடைய சகோதரன். நீர் இந்த இடத்தை சேர்ந்தவர் அல்ல. நீர் இல்லினாயிலிருந்து வருகிறீர். உம்முடைய பெயர் என்னவென்று தேவன் என்னிடம் கூற முடியுமென்று நம்புகிறீரா? ஃபார்மர். அது சரியா? உங்கள் கையையுயர்த்துங்கள். விசுவாசியுங்கள்! 61யாரோ ஒருவர் முழங்கால் படியிட்டு ஜெபித்துக் கொண்டிருக்கிறார். யாரோ ஒருவர் கட்டிலில் படுத்துக்கிடக்கிறார். சரி ஸ்திரீயே, நீ கேட்டது சத்தியமென்று விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாய். என்னால் சுகப்படுத்த முடியுமானால், நான் வந்து சுகப்படுத்துவேன். ஆனால் நீ ஏற்கனவே இயேசு கிறிஸ்துவினால் சுகப்பட்டுவிட்டாய். பார், பார்? நீ அதை விசுவாசிக்க வேண்டும். அங்கு நின்று ஜெபித்துக் கொண்டிருக்கும் ஸ்திரீ, நீ தொடப்பட வேண்டுமென்று ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். உன்னை எனக்குத் தெரியாது, ஆனால் தேவன் உன்னை அறிவார். நீயும் இப்பட்டினத்திற்கு வெளியேயிருந்து வந்திருக்கிறாய். அது உண்மை! நீ இல்லினாயை சேர்ந்தவள். அது முற்றிலும் உண்மை. இல்லினாயிலுள்ள அந்த பட்டினம் கிழக்கு மோலைன் என்று அழைக்கப்படுகிறது. நீ புற்று நோயினால் அவதியுறுகிறாய். நீ ஒரு போதகரின் மனைவி. நீ விசுவாசிக்கிறாயா? இல்லையென்றால் படுக்கையிலேயே நீ மரித்து விடுவாய். இன்றிரவு அவரை நீ ஏன் ஏற்றுக்கொண்டு, “என் இருதயத்தில் அவரை ஏற்றுக் கொள்கிறேன். இங்குள்ள எல்லாவற்றைக் காட்டிலும் மேலான என் விசுவாசத்தை கொண்டு, நான் சுகமடைந்தேன் என்று விசுவாசிக்கிறேன். நான் தேவனுடைய சமுகத்தில் இருக்கிறேன்'' என்று சொல்லக் கூடாது? படுக்கையை விட்டு எழுந்திரு. விசுவாசி. வீடு சென்று சுகமடைவாயாக. இதோ அவள். உன் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிக்கிறாயா? நாம் தேவனை ஸ்தோத்தரிப்போம். 62பரலோகப் பிதாவே, உம்முடைய நன்மைகள் யாவற்றிற்காகவும் உம்முடைய கிருபைக்காகவும் உம்மை நாங்கள் துதிக்கிறோம். நீர் இன்னும் இங்கு எல்லா தொல்லைகளின் மத்தியிலும் இந்த சீர்கெட்ட உலகில் இருப்பதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, உம்முடைய ஆவி எப்பொழுதும் எங்களுடன் தங்கியிருப்பதாக. தேவனே, நீர் இங்கே தோலை உடுத்தவராய் மனித இருதயங்களில் இருந்து கொண்டு விசுவாசத்தையும், வெளிப்பாட்டையும் தரிசனத்தையும் அருளுவதை நாங்கள் காண்கிறோம். நீர் உமது சபையில் தேவனாயிருக்கிறீர். உமது ஜனங்களில் தேவனாயிருக்கிறீர். கர்த்தாவே, இதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இன்றிரவு எல்லோரும் ஒருமனப்பட்டு விசுவாசித்து சுகம் பெறுவீர்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் நான் ஜெபிக்கிறேன். ஆமென். 63அந்த பக்கத்திலுள்ள எத்தனை பேருக்கு ஜெப அட்டைகள் உள்ளன? அந்த பக்கத்திலுள்ளவர்கள் பின்னால் நகர்ந்து இந்த உட்பாதையின் நடுவில் வாருங்கள். அந்த உட்பாதையிலுள்ளவர்கள் இந்த வழியாக வாருங்கள். உங்கள் இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வழியாக வாருங்கள். இவர்களுக்கு ஜெபம் பண்ணி முடிந்தவுடன், அடுத்த வரிசையிலுள்ளவர்கள் வரட்டும். மூப்பர்களே, இங்கு வாருங்கள். சகோ. ராய், கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக! நீர் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் அறியவில்லை. சபையின் மூப்பர்கள், அவர்கள் இருக்கும் இடங்களிலிருந்து உடனடியாக இங்கு வர விரும்புகிறேன். சிறு உதவிக்காக இங்கு வாருங்கள். ஜெபம் செய்யப்பட வேண்டிய ஒவ்வொருவரும் உங்கள் கையையுயர்த்தி, எனக்குப் பின்னால் இதை சொல்லுங்கள்: “கர்த்தாவே ... (சபையோர் சகோ. பிரன்ஹாம் கூறினவுடன் திரும்பச் சொல்லுகின்றனர் - ஆசி) நான் விசுவாசிக்கிறேன்... என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். உம்முடைய சமூகத்தில்.... உம்முடைய வார்த்தையை நான் பின்பற்றி.... என் மேல் இன்றிரவு கரங்கள் வைக்கப்படும் போது.... என் சுகத்தை நான் ஏற்றுக் கொள்ளப்போகிறேன்.... இயேசுவின் நாமத்தில் .... ஆமென்!'' தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது கவனியுங்கள். “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கும். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்”. அவர் நோவாவிடம் மழை பெய்யப் போவதாகக் கூறினார். அது ஒரு போதும்..... ''உங்களுக்கு ஜெபம் பண்ணி முடிந்தவுடனே, நீங்கள் சுகம் பெறுவீர்கள்'' என்று அவர் ஒரு போதும் கூறவில்லை. அவர், ''அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று கூறினார். 64அவர் நோவாவிடம் மழை பெய்யப் போவதாக கூறினார்; நூற்றிருபது ஆண்டுகளாக மழை பெய்யவில்லை, ஆனால் மழை பெய்தது. அவர் ஆபிரகாமிடம், சாராளின் மூலம் அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறினார். இருபத்தைந்து ஆண்டுகளாக அது நிறைவேறவில்லை. ஆனால் அவன் குழந்தையை பெற்றுக் கொண்டான். அவர் ஏசாயாவிடம் ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள் என்று கூறினார். அது எண்ணூறு ஆண்டுகளாக நிறைவேற வில்லை. ஆனால் அவள் கர்ப்பவதியானாள். அது சரியா? அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணினார். எவ்வளவு நாட்களானாலும், அவர் எப்படியும் அதை நிறைவேற்றுவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது முன்னால் வாருங்கள். சகோ. காப்ஸ் பாடலைத் துவங்கட்டும். நீங்கள் சுருதி கொடுங்கள்... இப்பொழுது எல்லோரும் ஜெபித்துக் கொண்டிருங்கள். 65எங்கள் பரலோகப் பிதாவே, வியாதியஸ்தர் மேல் எங்கள் கைகளை வைத்து உமது கட்டளைகளுக்கு நாங்கள் கீழ்ப்படியப் போகிறோம். கர்த்தாவே, நீர் செய்யக்கூடிய வேறொன்றும் எனக்குத் தெரியாது. ஏனெனில் அவர்களுடைய சுகத்தை நீர் கிரயத்துக்கு கொண்டதாக உம்முடைய வார்த்தையில் நீர் கூறியிருக்கிறீர். இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கும் வார்த்தையாக எங்களுடன் இன்றிரவு இருப்பதை நீர் நிரூபித்தீர். எங்கள் மத்தியில் நீர் இருப்பதை நிரூபித்துவிட்டீர். பிதாவே, தவறக் கூடாத உம்முடைய வார்த்தை ஒவ்வொரு இருதயத்துக்கும் தத்ரூபமாக அமைய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். “இந்த மலையைப் பார்த்து, பெயர்ந்து போ” என்று சொல்லி, உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் அது அப்படியே ஆகும்'' என்று நீர் சொல்லியிருக்கிறீர். அது எப்பொழுது ஆகும் என்று நீர் கூறவில்லை. பெந்தெகொஸ்தேயன்று ஜனங்களிடம் போய் காத்திருக்கும்படி கூறினீர். எத்தனை மணிநேரம், எத்தனை நாட்கள் என்று நீர் கூறவில்லை. நீர் அது வரைக்கும் என்றுகூறினீர். இப்பொழுதும் கர்த்தாவே, இவர்கள் தங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்ள முன் வருகின்றனர். அவர்களுக்கு விடுதலை வரும் வரைக்கும் சுகம் பெறுதல் அல்லாமல் வேறெதையும் குறித்து சிந்திக்காதிருப்பார்களாக. விசுவாசிகள் என்னும் முறையில் அவர்கள் மேல் எங்கள் கைகளை வைத்து உமக்குக் கீழ்ப்படிகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 66சரி, இப்பொழுது முன்னால் வாருங்கள்... (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி ) நீ சுகமடைந்து விட்டாய், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.... அது நல்லது. (ஒலி நாடாவில் காலி இடம்- ஆசி) %எல்லாம் கை கூடிடும் நம்பிடுவாய்! நம்பிடுவாய்! நம்பிடுவாய்! எல்லாம்....... (கர்த்தராகிய இயேசுவே, இந்த உறுமால்களுக்காக நான் ஜெபிக்கிறேன்... இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.) அந்த வார்த்தைகளை நாம் மாற்றிப் பாடுவோம்! %இப்பொழுது நம்புகிறேன்! %இப்பொழுது நம்புகிறேன்! %எல்லாம் கைகூடிடும், %இப்பொழுது நம்புகிறேன்! %இப்பொழுது நம்புகிறேன்! %இப்பொழுது நம்புகிறேன்! %எல்லாம் கைகூடிடும், %இப்பொழுது நம்புகிறேன்! நீங்கள் கேட்டுக் கொண்டதும் வாஞ்சித்ததும் அருளப்படும் என்று விசுவாசிக்கிறீர்களா? அது நிச்சயம் நடக்கும். 67சில நிமிடங்களுக்கு முன்பு, சிக்காகோவைச் சேர்ந்த என் இத்தாலிய நண்பர்கள். சிலர் ஜெப வரிசையில் நடந்து சென்றதைக் கண்டேன். எத்தனை பேருக்கு சிக்காகோவைச் சேர்ந்த சகோதரி போடோஸியை தெரியும்? நல்லது, அண்மையில் அவளுக்கு மனநிலை கோளாறு ஏற்பட்டதென்று உங்களுக்குத் தெரியும், அது மிகவும் மோசமடைந்தது. அன்று காலை சிக்காகோவில் நடந்த கிறிஸ்தவ வர்த்தகர் காலை உணவு கூட்டத்தின் போது, பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் நான் அந்த சகோதரியிடம்.... அவள் ஒரு பக்கம் வந்தபோது, அவளால் துயரத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை. நான், “சகோதரியே, அது உடனடியாக சுகமாகாது, ஆனால் பதினெட்டு மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் நீ சுகமடைந்து விடுவாய். அந்த காலவரம்பிற்குள் நீ சுகம் பெறுவாய்'' என்றேன். 68அன்றொரு நாள் அவளுடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது.... அவள் சாட்சி கூறுவதை நான் கேட்டேன். அவள் மகிழ்வுற்றிருந்தாள். அவளுடைய வாழ்க்கையிலே அதுவே மிகவும் மகிழ்ச்சியுற்ற தருணம். சென்ற ஞாயிறுக்கு முந்தின ஞாயிறு அவள் சாட்சி கூறினாள். அவள் காரில் போய்க் கொண்டிருந்தாள். அவளுக்கு சமாதானமே இல்லை. தேவனுடைய சமூகம் அவளை விட்டுச் சென்றுவிட்டது போல் தோன்றினது (அது மனநிலை கோளாறின் காரணமாக, உங்களுக்குத் தெரியும்). திடீரென்று அது மகிழ்ச்சி பொங்கத் திரும்பி வந்தது. பரிசுத்த ஆவியின் வல்லமை அவள் மேல் இறங்கினது. அவள் அழுதாள். அவர்கள் மகிழ்ச்சியான தருணம் அனுபவித்தனர் - மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன்பு ஒரு மாதத்துக்கு முன்பு அவள், ''சகோ. பிரன்ஹாமே, நான் வீடு திரும்பின போது, அந்த ஒலிநாடாவை எடுத்துப் பார்த்தேன். அது சரியாக பதினெட்டு மாதங்களுக்கு முன்பு'' என்றாள். ஆமென். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர் அற்புதமானவர் அல்லவா? 69இத்தனை ஆண்டுகளாக ஒரு முறையும் கூட தவறாமல் அவருடைய வார்த்தையின் மூலம் சரியாக முன்னுரைத்து வந்துள்ள அதே பரிசுத்த ஆவி, இன்றைக்கு உங்களுக்கு, கர்த்தர் எங்கோ தூரத்தில் உள்ள ஒருவரோ அல்லது சரித்திர சம்பந்தமான ஒருவரோ அல்ல; அவர் இன்றைக்கு நிகழ்காலத்தில் - ஜீவிக்கிறவராய், தமது வார்த்தையை வெளிப்படுத்துகிறவராய், நமது சபையில் மனித திரையின் பின்னால்மறைந்து கொண்டிருக்கிறவராய் இருக்கிறார் என்றும், உங்கள் விசுவாசமும் என் விசுவாசமும் ஒன்று சேர்ந்து தேவனுடைய ஒரே அம்சமாக ஆகும் போது, அவர் தம்மை வெளிப்படுத்துகிறார் என்றும் வலியுறுத்துகின்றார். உங்களையல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. என்னாலேயல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. நாம் ஒருமித்து ஒரே அம்சமாகின்றோம், அந்த தொடர்பு... தேவன் அந்த நோக்கத்துக்காகவே என்னை அனுப்பினார். நீங்கள் விசவாசிக்கும் போது, அது நடக்கிறது. அது முற்றிலும் உண்மை . பாருங்கள், அது பரிபூரணமாக உறுதிப்படுகிறது. உங்களுக்கு என்ன கோளாறு இருந்தாலும், யார் என்ன கூறினாலும், எனக்குக் கவலையில்லை. நீங்கள் சுகமடைவீர்கள் என்று உங்கள் இருதயத்தில் விசுவாசிப்பீர்களானால், எதுவும் அதை நிறுத்த முடியாது. அவர் அப்படி சொல்லியிருக்கிறார். ''வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ தவறுவதில்லை'' என்று அவர் கூறியுள்ளார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் நான் செல்லவிருக்கும் மற்ற கூட்டங்களுக்காக எனக்கு ஜெபம் செய்வீர்கள்? ஜெபம் தேவைப்படுவது எனக்கே. பாருங்கள், உங்களைத் தவிர மற்றெல்லாரும் என்னைப் புறக்கணித்து விட்டார்கள். இருப்பினும், அங்கு வித்து உள்ளது. 70நான் தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். நான் ஒவ்வொருவரையும் மூன்று முறை? ஒரு முறை பிதாவுக்காக, ஒரு முறை குமாரனுக்காக, ஒரு முறை பரிசுத்த ஆவிக்காக - முகங்குப்புற தண்ணீரில் முழுங்கி ஞானஸ்நானம் கொடுப்பேன் என்று ஒரு தாளில் கையொப்பமிட்டுக் கொடுத்தாலொழிய அவர்கள் என்னை அனுமதிக்கமாட்டார்களாம். நான் அவர்களுக்கு இவ்வாறு பதில் எழுதினேன்: ''கடந்த சில ஆண்டுகளாக பரிசுத்த ஆவியானவர் என்னை ஆப்பிரிக்காவுக்கு கொண்டு செல்ல முயன்று வருகிறார். ஒரு பகல் வேளையில் முப்பதாயிரம் பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அந்த இடத்தில் அவர் என் ஊழியத்தை உபயோகிக்க விரும்புகிறார். அந்த ஆத்துமாக்களின் இரத்தப்பழி உங்கள் மேல் இருக்கும், என் மேல் அல்ல என்பதை நினைவு கூருங்கள். நான் வருகிறேன் என்று கூறினேன். நீங்களோ அதை மறுக்கிறீர்கள்“ என்று தேவனுடைய குமாரனாகிய இயேசு சபையை விட்டு துரத்தப்பட்டு, வார்த்தை புறக்கணிக்கப்பட்ட இந்நாளில் அது வேறு எப்படியிருக்குமென்று வியக்கிறேன். ஆனால் இவையெல்லாவற்றிலும், அவர் இன்னும் தம்மை தமது மக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறார். அதற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறீர்கள் அல்லவா? 71இன்றிரவு நான் கடந்து சென்று, அவர்கள் மேல் என் கைகளை வைத்தேன். அவர்களில் சிலர் வயது சென்ற ஸ்திரீகள், சிலர் வாலிபர்கள், சிலர் வயோதிபர்கள். நான் மிகவும் வியர்த்து நனைந்து போனேன். இங்கு உட்கார்ந்து கொண்டு வார்த்தையைக் கேட்டு கொண்டிருப்பதை ஏனைய உலகம் பைத்தியக்காரத்தனம் என்று நினைக்கும்'' என்று எண்ணினேன். பாருங்கள். அவர்கள் 'போல்டு' (bolt). பாருங்கள்? அதற்கு மறை போட்டு, உங்களை வியாதியினின்று வெளியே இழுத்துக்கொள்ள தேவன் இங்கிருக்கிறார்.அது வார்த்தை அளிக்கும் வாக்குத்தத்தம். ஞாபகம் கொள்ளுங்கள், அது பிகுவாகத் தொடங்கும் (tightening): ''அவர்களை நான் இழுத்துக் கொள்ளுவேன். நான் உயர்த்தப்பட்ட பின்பு இழுத்துக் கொள்ளுவேன்''. அவர் உங்களிலிருந்து அதை வெளியே இழுப்பார். அவர் நிச்சயம் செய்வார். அவரை விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். அவரில் விசுவாசமாயிருங்கள். அவரைச் சந்தேகிக்காதீர்கள். அவரை விசுவாசியுங்கள்! 72எனக்காக ஜெபியுங்கள். வேறு யாருக்கும் நீங்கள் ஜெபம் பண்ண அவசியமில்லாதிருக்கும் வேளையில், என்னை நினைவு கூருங்கள். அதன் பிறகு... நாம் சந்திக்கும் வரைக்கும் நாம் சந்திக்கும் வரைக்கும் நாம் இயேசுவின் (நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததற்காக நன்றி, நீங்கள் வீடு திரும்பும்போது தேவன் உங்களைப் பாதுகாப்பாராக!) நாம் சந்திக்கும் (எல்லா கிறிஸ்தவர்களையும் வாழ்த்துங்கள்; இங்குள்ள கூட்டத்தினர் வாழ்த்தினதாக கூறுங்கள். தேவனுடைய சமாதானம் உங்கள் மேல் தங்கியிருப்பதாக; ஷலோம் நாம் சந்திக்கும் வரைக்கும் தேவன் உங்களோடு கூட இருப்பாராக (சகோ. பிரன்ஹாம் பாடலை மெளனமாக இசைக்கிறார்; இடைஇடையே பாடுகின்றார் - ஆசி). நாம் சந்திக்கும்... இயேசுவின் பாதங்களில் நாம் சந்திக்கும் வரைக்கும் நாம் சந்திக்கும் வரைக்கும் நாம் சந்திக்கும் வரைக்கும் தேவன் உங்களோடு கூட இருப்பாராக. 73எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பாருங்கள், எத்தனையோ காரியங்கள் எனக்குத் தெரியாது, ஆனால் சில காரியங்கள் எனக்குத் தெரியும். உங்களுக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். உங்களுடன் நான் தொடர்பு கொண்டுள்ளதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களில் ஒருவனாக இருப்பதைக் குறித்து நான் மகிழ் கூறுகிறேன். தேவன் உங்களோடு இருப்பாராக. அவர் நிச்சயம் இருப்பார். அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை. அவர் உங்களை விட்டு விலக மாட்டார். நீங்கள் இப்பொழுது திரையைக் கடந்து வந்து விட்டீர்கள். ஜார்ஜியாவைச் சேர்ந்த நமது கூட்டாளி போதகரில் ஒருவரான சகோ. பாமரை இன்றிரவு காண்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சகோ. ஜூனியர் ஜாக்சன் இக்கட்டிடத்தில் எங்கோ இருக்கிறார் - பின்னால் மூலையில் இருக்கிறார். அவர் வந்திருப்பதைக் குறித்தும் எங்களுக்கு மகிழ்ச்சி. சகோ. டான் ரட்டல் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்... ஓ, எத்தனையோ பேர். எனக்குத் தெரியவில்லை. நான் யாரையாகிலும் காணத் தவறினால்... சகோ. பென் ப்ரையன்ட் இங்கிருக்கிறார். இன்னும் அநேகர் இங்குள்ளனர். அருமை சகோதரர் வில்லர்ட் காலின்ஸ் . நீங்கள் எல்லாரும் இங்கு வந்திருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இப்பொழுது நாம் சிறிது நேரம் எழுந்து நிற்போம். இப்பொழுது நாம் தலை வணங்குவோம். நாம் சந்திக்கும் வரைக்கும் நாம் சந்திக்கும் வரைக்கும் நாம் இயேசுவின் பாதங்களில் சந்திக்கும் வரைக்கும் நாம்சந்திக்கும் வரைக்கும் நாம் சந்திக்கும் வரைக்கும் நாம் சந்திக்கும் வரைக்கும் தேவன் உங்களோடு கூட இருப்பாராக. 74நீங்கள் ஆவியுடன் அந்த ஐக்கியத்தின் அருகாமையை உணருகிறீர்களா? நாம் மெளனமாக இசைப்போம். வினோதமானவன் (சபையோர் மெளனமாக இசைக்கும்போது சகோ. பிரன்ஹாம் பேசுகிறார் - ஆசி) (ஓஹையோவைச் சேர்ந்த சகோ. மக்கின்னி நம்முடன் இருப்பதை நான் கவனித்தேன்; சகோ. ஜான் மார்டினும் அவருடைய சகோதரனும். நீங்கள் எல்லோரும் வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் ஒருக்கால் உங்களைக் காணத் தவறலாம். ஆனால் அவர் உங்களை அறிந்திருக்கிறார்.) ... (நாம் சந்திக்கும் வரைக்கும்;) (நாம் சந்திக்கும் வரைக்கும் என் இருதயமும் உங்கள் இருதயங்களும் தேவனுடைய இருதயத்துடன் ஒன்றாயிருப்பதாக.) நாம் ஜெபத்திற்காக இப்பொழுது தலை வணங்குவோம். அவர்கள் இங்கு வந்திருப்பதற்காக நமக்கு மகிழ்ச்சி என்று ஒவ்வொரு போதகருக்கும் தெரியப்படுத்துங்கள். சபையார் அனைவரும், டென்னஸி, ஓஹையோ மற்றும் தேசம் முழுவதிலும் முள்ள ஜனங்களாகிய நீங்கள்.... போஸ்டனிலிருந்து வழி நெடுக வந்துள்ள சில ஸ்திரீகளை இன்று சந்தித்தேன். அங்கிருந்து வந்துள்ள கறுப்பு சகோதரர்களும் இன்று காலை இங்கிருந்தனர். நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து எத்தனையோ பேர். விசுவாசமுள்ள என் அருமையான சிநேகிதனே, உனக்கு நன்றி. தேவன் உன்னோடு இருப்பாராக. உன்னை என் சிநேகிதன் என்று அழைக்கிறேன். அதைக் குறித்து இயேசு என்ன கூறினார் என்று ஞாபகம் உள்ளதா? “சிநேகிதன் என்பவன் சகோதரனைக் காட்டிலும் நெருங்கியவன் என்று.'' நாம் இப்பொழுது தலை வணங்கியிருக்கும் போது... இன்னும் சில நாட்களில் நாம் மறுபடியும் சந்திக்கும் வரைக்கும், தேவன் உங்களோடு கூட இருப்பாராக. நமது நல்ல விசுவாசமுள்ள சகோதரன், சகோ. ரிச்சர்ட் ப்ளேர் அவர்களை ஜெபம் செய்து கூட்டத்தை முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப் போகின்றேன். சகோ. ப்ளேர்.